நீங்க கண்டிப்பா பண்ணனும்! கவினுக்கு கால் செய்த ஆண்ட்ரியா?

Published by
பால முருகன்

சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக ஆண்ட்ரியாவுடன் “மாஸ்க்” என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். படத்தை இயக்குனர் விக்ரமன் அசோக் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பூஜை வீடியோ உடன் வெளியாகி இருந்தது. இந்த படம் முன்பே ஆரம்பிக்க வேண்டிய படமாம். சம்பள விஷயம் பேசும்போது கவினுக்கு உடன் பாடு இல்லாததன் காரணமாக தான் கொஞ்சம் தாமதமாக படம் தொடங்கி இருக்கிறதாம். படத்தை ஆரம்பிக்கும்போது வெற்றிமாறனும் கவினும் கலந்து பேசி கொண்டு இருந்தார்களாம்.

அப்போது சம்பளம் பேசும்போது கவினுக்கு அந்த சம்பளத்தில் உடன் பாடு இல்லை என்ற காரணத்தால் அப்படியே பேச்சுவார்த்தை தள்ளி சென்றதாம். அதன்பிறகு கவின் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆக அப்படியே அந்த படத்தின் பேச்சுவார்தையும் நின்றுவிட்டதாம். பிறகு இந்த படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கிறது படத்தை என்று ஆண்ட்ரியாவே களத்தில் இறங்கிவிட்டாராம்.

களத்தில் இறங்கிய நடிகை ஆண்ட்ரியா இறங்கி கவினுக்கு கால் செய்துவிட்டாராம். கால் செய்துவிட்டு நீங்கள் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்கவேண்டும் உங்களுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் படத்தில் நன்றாக அமையும். விரைவாக பேசி படத்தை உடனடியாக ஓகே செய்யுங்கள் என்று கூறினாராம். ஆண்ட்ரியா கால் செய்து பேசியவுடன் மீண்டும் கவின் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாராம்.

அப்போது சம்பள விஷயமும் சரியாக பேசி படத்தை உடனே தொடங்கலாம் என்று கூறியவுடன் படத்திற்கு பூஜை போடப்பட்டதாம். ஆண்ட்ரியா கவினுக்கு கால் செய்து பேசவில்லை என்றால் இந்த படம் இந்த அளவுக்கு விரைவாக தொடங்கி இருக்காது எனவும் இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

10 minutes ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

1 hour ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

2 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

4 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

5 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

5 hours ago