vijay angry [File Image]
லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னகுமார் “எவ்வளவு மேல பறந்தாலும் பசித்தால் இறைக்கு கீழே தான் வரவேண்டும்” என ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்க -கழுகு கதையை கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருந்தார். ரத்னகுமார் இப்படி பேசியவுடன் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் ரத்னகுமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இப்படியான விமர்சனங்கள் வர தொடங்கியதற்கு மத்தியில் இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் தான் ஈடுபடவுள்ள காரணத்தால் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து சில மாதங்கள் விளங்குவதாகவும் எழுதி முடித்த பிறகு மீண்டு வருவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
இருந்தாலும் ரத்னகுமார் பேசி இரண்டு நாட்கள் கடந்தாலும் இன்னும் அவர் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். ரத்னகுமார் விழாவில் இப்படி பேசியது விஜய்க்கே மிகவும் கோபம் வந்ததாம். ஏனென்றால், விஜய் வேறு எதோ பேசவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், ரத்னகுமார் இப்படி பேசியதால் கடுப்பான விஜய் சில விஷயங்களை மறந்துவிட்டாராம்.
கழுகு கழுகா தான் இருக்கு…காக்கா தான் கழுகாக முன்னேறிக்கிட்டு இருக்கு! – கே.ராஜன்
இந்த வெற்றி விழா முடிந்த பிறகு நடிகர் விஜய் ரத்னகுமார் முகத்தை கூட பார்க்கவில்லையாம். அந்த அளவிற்கு அவர் பேசிய காரணத்தால் மிகவும் கடுப்பில் இருந்தாராம். ரத்னகுமார் பேச போனதும் நீ முதலில் இங்கு இருந்து கிளம்பு எனவும் விஜய் கூறிவிட்டாராம். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த லியோ படக்குழுவுமே ரத்னகுமார் மீது பயங்கர அப்செட் ஆகிவிட்டார்களாம்.
ரத்னகுமார் பேசியதற்கு விஜய் கடுப்பான தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை கேட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விஜய் டென்ஷனாகி ரத்னகுமாருக்கு செம்ம டோஸ் கொடுத்த காரணத்தினால் தான் ரத்னகுமார் சோஷியல் மீடியாவை விட்டு ஓடிவிட்டாரோ என கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…