எனக்கு நீ சொல்லி குடுக்கிற அளவுக்கு உனக்கு தகுதி கிடையாது! கவினுக்கு பல்ப் கொடுத்த சாக்ஷி!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சில் ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அபிராமி, சாக்ஷி மற்றும் மோஹன்வைத்யா மூவர் தலைமையிலும் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனையடுத்து, அப்போது கவின் மற்றும் சாட்சிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், சாக்ஷி கவினை பார்த்து, எனக்கு நீ சொல்லிகுடுக்குற அளவுக்கு உனக்கு தகுதி கிடையாது என கூறியுள்ளார்.