கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம்…பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை.!
மடல் அழகியும், முன்னணி நடிகையுமான தபு தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட், சினேகிதி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகை தபு தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பல பேட்டிகளில் தைரியமாக தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் “திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் குழந்தைக்கு தாயாக ஆசை உள்ளது. அதற்கான நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும்.
இதையும் படியுங்களேன்- கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமே அதுக்கு ‘நோ’… சமந்தாவின் அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…
ஏன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகை தபு. மேலும், 51 வயதான நடிகை தபு இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.