சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க! ஓடிடியில் திடீரென வெளியான தங்கலான்!
தங்கலான் திரைப்படம் டிசம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்க்கு வந்துள்ளது.
சென்னை : தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு ஐயோ இந்த படத்தை தியேட்டரில் பார்த்திருக்கலாம் என கூறி வருகிறார்கள்.
தங்கலான்
தங்க சுரங்கத்தில் படம் எடுக்கப்பட்டதால் கேஜிஎப் அளவுக்கு படம் எடுக்கப்பட்டு வருகிறது என படம் எடுக்கும் சமயத்தில் தகவல்கள் வெளியான காரணமே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகமாக முக்கிய காரணம் என்றே கூறலாம். அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியீட்டு 500 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்டது.
ஆனால், படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். 100 கோடி முதல் 150 கோடி பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் மொத்த நாளில் உலகம் முழுவதும் 100 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
ஓடிடி ரிலீஸ்
இந்த திரைப்படம் திரையரங்குகளில் கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியான நிலையில், படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்காத பலரும் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். இருப்பினும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவாக வந்த பாடு இல்லை. முன்னதாக படம் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் வெளியாகவில்லை.
எனவே, எப்போது தான் படம் ஓடிடியில் வெளியாகும் என பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில், திடீரென படம் டிசம்பர் 10-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளில் பார்க்க தவறிய பலரும் படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.