நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது .
அந்த வகையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய் தேவரகொண்டாவிடம் ” சமந்தாவுக்கு இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு நோய்வாய்ப்பட்டதா அல்லது அதற்கு முன்பே நோய்வாய்ப்பட்டதா? என தனது கேள்வியை அனைவருடைய முன்பாக வைத்தார்.
அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா சமந்தா நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு 60% முடிந்து விட்டது பிறகுதான் அவருக்கு நோய் இருப்பது தெரிய வந்தது. பின் அவர் ஓய்வெடுத்து அவர் குணமடைந்த பின்பு 40 சதவீத படப்பிடிப்பு எடுத்தோம்” என பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு பதில் கூறியிருந்தார்.
கேள்வி கேட்டதற்கு விஜய் தேவரகொண்டா பதில் கூறிவிட்டார். எனவே, அதனை அப்படியே விடாமல் பயில்வான் ரங்கநாதன் மீண்டும் விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா இப்படி நோய்வாய்ப்பட்டதற்கு நீங்கள் தான் காரணம் என கூறினார் அதனை பார்த்த அங்கிருந்த மற்ற பத்திரிகையாளர்களும் சிரிக்க தொடங்கினர்கள்.
பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி சரியாக விஜய் தேவரகொண்டாவிற்கு புரியாத காரணத்தால் புரியவில்லை என்று கூறிவிட்டு வருகை தந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். இருப்பினும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், அதனை பார்த்த பலரும் ஒரு நடிகரிடம் இப்படியா கேள்வி கேப்பீங்க? என கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு நோய் குணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். நோய் குணமாகும் வரை படங்களில் நடிக்கவேண்டாம் கமிட் ஆனா படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அவர் திருப்பிக்கொடுத்துவிட்டு ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…