சினிமா

நீ வீரனே கிடையாது உனக்கு தகுதியே கிடையாது! பிரதீபுக்கு ரைடு விட்ட நிக்சன்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே பிரதீப் அனைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மாயா கிருஷ்ணன், விஸ்ணு, விசித்ரா ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் விசித்ராவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது மிகப்பெரிய சண்டையே வெடித்தது என்றே கூறலாம். ஏனென்றால், பிரதீப் விசித்ராவுடன் ஒரே பேட்டில் தூங்கவேண்டும் என்பது போல பேசி இருந்தார்.

இதனால் மிகவும் கடுப்பான விசித்ரா உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்னுடன் நீ ஒரு பேட்டில் தூங்கவேண்டும் என்று சொல்வது சுத்தமாக சரியில்லை. என கூறிருந்தார். பிறகு மீண்டும் பிரதீப் விசித்ராவிடம் ஜாலியாக விளையாடினார். மீண்டும் கடுப்பான விசித்ரா என்னிடம் இப்படி கிறுக்கி தனமான பண்ணிட்டு இருக்காதா அடிச்சிட்டு ரெட் கார்ட் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுவிடுவேன் என கூறினார்.

தொடர்ச்சியாக இப்படி சக போட்டியாளர்களுடன் பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாடகர் நிக்சனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். நிக்சனை பார்த்து பிரதீப் நீ வீரன் இல்லை கோலை என்று கூறியுள்ளார். இதனால் சற்று கடுப்பான நிக்சன் நான் வீரன் என்று யாரிடமும் சொல்லவில்லை யாரிடமும் அப்படி நடந்துகொள்ளவில்லை. நீங்கள் என்னை பற்றி அப்படி சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை.

நீங்கள் என்னை பற்றி ஒரு விஷயம் நினைத்து வைத்துளீர்கள் ஆனால், அது என்னோட விளையாட்டு அல்ல நான் விளையாடும் விளையாட்டு வேறு மாதிரி எனவே என்னை பற்றி தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீர்கள். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இருக்கிறேன். பசியில் இருந்து பாட்டு பாடி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்.

என்னை பார்த்து நீங்கள் எப்படி தகுதி இல்லை என்று சொல்லலாம்? என்னை பார்த்து இப்படி சொல்ல உனக்கு தான் தகுதியே இல்லை என்னிடம் திறமை இருக்கிறது. உன்னுடைய விளையாட்டு பற்றி எனக்கு நல்லாவே தெரியும் வெளியே இருந்து கொண்டு நன்றாக விளையாட்டை புரிந்துகொண்ட வந்திருக்கிறாய். இது தான் உன்னுடைய விளையாட்டின் திட்டம் இந்த மாதிரி விளையாடி கேவலமாக வெற்றிபெறவேண்டும் என்றால் எனக்கு அப்படிப்பட்ட வெற்றியே தேவை இல்லை.

உன்னால் முடிந்தால் விளையாடு இல்லனா அமைதியாக உட்காரு  என்று நிக்சன் மிகவும் காட்டத்துடன் பேசுகிறார். இது தான் ப்ரேமாவில் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக இரவு நடைபெறும் காட்சியில் பிரதீப் “நீ வீரனே இல்லனா எதுக்குடா ஆர்டிஸ் என்று சொல்கிறீர்கள்? அசிங்கமாக இருக்கு நீ இப்படியெல்லாம் சொல்வாய் என்று நீ ஒரு ஆர்டிஸ் என்று மதித்து உன்னிடம் பேசினேன் பாரு என்னை தான் செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டு செல்கிறார். பிறகு கண்கலங்கிய வாறு நிக்சன்  நின்றார். சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதலை தெரிவித்தனர். இப்படி தொடர்ச்சியாக பிரதீப் அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது பிக் பாஸ் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

2 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

3 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

3 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

6 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

6 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

6 hours ago