Boat - yogi babu [File Image]
காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார். கடைசியாக, அவர் ஜவான் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது, இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்திற்கு ‘போட்’ (BOAT) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. யோகி பாபு முதன்முறையாக சிம்பு தேவனுடன் கைகோர்த்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கடலில் வைத்து எடுக்கப்பட்டுள்ள நெய்தல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை என் 305-இல் கடவுள் மற்றும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சிம்பு தேவன் இந்த படத்தை இயக்குவதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, யோகி பாபு நடித்துள்ள சர்வைவல் த்ரில்லர் நிறைந்த அரசியல் நகைச்சுவை கலந்த ‘போட்’ (BOAT) திரைப்படத்தின் டீசர் நாளை மறுநாள் (16ஆம் தேதி)துபாயில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திமிட்டுள்ளனர். அது குறித்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் ஒரு படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதுவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் பேனர்கள் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யமணி மாறன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…