இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவிற்கு வழக்கமான ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்காமல் ஒரு எமோஷனலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
படத்தை பார்த்த பலருக்கும் அவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது. ஏனென்றில் அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் கடைசியில் மிகவும் எமோஷனலாக இருக்கும். இந்தநிலையில் , தற்போது யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- எல்லை மீறி போயிட்டீங்க… ராபர்ட் மாஸ்டர் செய்த செயலால் செம கடுப்பான ரச்சிதா கணவர்.!
அந்த மீமில் “வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது” என்று லவ் டுடே படத்தில் யோகிபாபு சொல்வதை பதிவிடபட்டுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம் வைரலாகி வருகிறது.
மேலும், யோகி பாபு சினிமாவிற்குள் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் உருவகேளிக்கு ஆளானார். எனவே திடீரென இந்த காட்சியும் அவருக்கு பழைய கசப்பான நினைவுகளை கொடுத்துள்ளதால் இந்த மீமை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்களும் தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…