காமெடி நடிகராக ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் யோகி பாபு மற்றோரு பக்கம் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக அவருடைய நடிப்பில் கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. விருதுகளையும் குவித்தது.
அந்த வெற்றியை தொடர்ந்து யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கௌரி ஜி கிஷன், மதுமகேஷ், ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
100 பேரை வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்த அஜித் குமார்!
முழுக்கமுழுக்ககடலில் நடக்கும் சம்பத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் டீசரும் நாளை துபாயில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில். இந்த திரைப்படம் குறித்த வியப்பான தகவல் ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படம் ஹிந்தியில் விற்பனை செய்யப்பட்ட விலை விவரம் தான்.
ஏனென்றால், இதுவரை ஹீரோவாக நடிக்கும் யோகி பாபுவின் படங்கள் ஹிந்தியில் பெரிய அளவில் விற்பனை ஆனது இல்லயாம். ஆனால், முதன் முறையாக யோகி பாபு ஹீரோவாக நடித்த படம் ஹிந்தியில் மட்டும் 2 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். ‘போட்’ படத்தின் ஹிந்தி உரிமம் மட்டும் 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிதாம். இதன் மூலம் யோகி பாபுவின் படங்களில் அதிகம் ஹிந்தியில் விற்பனை ஆன படம் என்ற சாதனையையும் போட் படைத்துள்ளதாம். இதனை கோடிக்கு படம் விற்கப்பட்டு இருக்கிறது என்றால் நிச்சியமாக படத்தில் எதோ பெரிதாக இருக்கிறது என தெரியவந்துள்ளது.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…