Nayanthara: மண்ணாங்கட்டி பூஜைக்கு வராத நயன்தாரா! தலைமை தாங்கிய யோகி பாபு…

நடிகை நயன்தாரா, யோகி பாபு நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆனால், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படமான ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நடிகை நயன்தாரா தவிர, இந்த படத்தில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று மண்ணாங்கட்டி படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், யோகிபாபு, இயக்குநர் விக்கி, கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ஆனால், படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகை நயன்தாரா, இந்த திரைப்படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்ளல்விலை. இதனால், படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் நடிகர் யோகி பாபு இந்தவிழாவை தலைமை தாங்கி சிறப்பித்துள்ளார். தற்போது, படப்பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பொதுவாக, நயன்தாரா தான் நடிக்கும் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார். இதனை வழக்கமாக வைத்துள்ள அவர், நேற்று மும்பையில் முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், தான் நடிக்கும் பூஜை விழாவில் கூட கலந்து கொள்ள முடிவில்லையா என்று நநெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Here are the visuals from the pooja of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara. The film goes on floors very soon.
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia. pic.twitter.com/6tUwzV3p6z— Prince Pictures (@Prince_Pictures) September 20, 2023
சமீபத்தில், இந்த படத்திற்கு “மண்ணாங்கட்டி (1960 ஆம் ஆண்டு)” என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். மேலும், படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி மதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.