சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!
நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் எழுத்தளராக பணிபுரிந்த அருள் செழியன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது, வெளியாகியுள்ள ட்ரைலரில், யோகி பாபு சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை வளர்க்கும் சாமானியராக காட்டப்பட்டுள்ளது.
சொந்த ஊரில் அவரது தாயார் தனது சொந்த ஊரில் காலமானால், அவர் வரும் வரை அவரது சடலத்தை ஐஸ் பெட்டியில் பாதுகாக்கும்படி கேட்கிறார். பின் சவுதியில் இருந்து வந்ததும் இறுதி சடங்குகள் முடிகிறது. ஒரு சென்டிமென்டாக யோகி பாபு தனது தாயின் நினைவாக ஐஸ் பெட்டியைப் வைக்க, பின்னர் அது காணாமல் போகிறது.
காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்
அதை கண்டுபிடிப்பது தான் படத்தின் மீதி கதையாக கட்டப்பட்டுள்ளது. செண்ட்மென்ட் நகைச்சுவை என கலந்து யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஏஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி தயாரிக்க, இசையமைப்பாளர் அந்தோணிதாசன் இசையமைக்க, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.