டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, ஜிபி முத்து தன்னுடைய வீடியோக்கள் அனைத்தையும் யூடியூப் சேனலில் வெளியிட்டார். இதன் காரணமாக அவருக்கு சில படங்களில் நடிக்கவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களிலே வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு அடுத்ததாக குக் வித் கோமாளி 4 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்யும் காமெடிகள் மக்களை வெகுவாக கவர்ந்து சிரிக்க வைக்க அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஒரு காரணமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த ஜிபி முத்து கடைசியாக ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜிபிமுத்து சில இயக்குனர்களுடன் கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில், யோகி பாபு நடிக்கும் படத்தில் ஜி.பி.முத்து ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
இதுவரை எந்த ஒரு நேர்காணலில் கலந்துகொள்ளாத யோகி பாபு ஜிபி முத்துவை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் யோகிபாபு பல விஷயங்களை ஜிபி முத்துவிடம் கேட்டார். அதற்கு அவரும் பதில் அளித்தார். இறுதியில் பேட்டி முடிந்த பிறகு ஜிபி முத்துவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், யோகி பாபு ஒரு விஷயம் ஒன்றை கூறினார்.
அதில் பேசி யோகி பாபு “தயாரிப்பாளர் சசி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நான் காமெடியனாக நடிக்கிறேன். நீங்கள் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க போறீங்க என கூறினார். இதனை கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த ஜிபி முத்து உங்களுடன் இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா ” என ஜிபிமுத்து தெரிவித்தார். விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…