யோகிபாபு நாயகனாக நடிக்க இருக்கும் ஒரு காதல் திரைப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஒரு காமெடிநடிகர் கால்ஷீட்களுக்காக படக்குழுவினர் காத்திருக்கிறார்க என்றால் அது நடிகர் யோகி பாபுவுக்காக தான். அந்தளவுக்கு பிசியாக நடித்து வருகிறார். தற்போது வெறும் காமெடி நடிகர் என்று மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் அவர் கலக்கி வருகிறார்.
யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடேயும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அவரை முன்னணி நடிகராக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது முருகேஷ் பாபு எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்க உள்ளாராம். அந்த படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். காதல் கதை என்றாலும், யோகி பாபுவின் அக்மார்க் காமெடி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…