தூய்மை பணியாளருடன் மேடையில் வைப் செய்த ‘யோ யோ ஹனிசிங்’…! வைரலாகும் அசத்தல் வீடியோ.!
பிரபல ராப் பாடகர் ஹிர்தேஷ் சிங் எனும் (யோ யோ ஹனி சிங்) தமிழில் எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ‘Speed speed speed வேணும்’ பாடலில் அனிருத், ஹிப் ஹாப் ஆதி ஆகியோருடன் சேர்ந்து பாடியிருப்பார். இந்த பாடலை படித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியிலும் பிரபலமானவர்.
மேலும், ராப்பர் யோ யோ ஹனி சிங் வெளியே எங்கு சென்று இசை நிகழ்ச்சி நடந்தினாலோ அல்லது ஏதேனும் விஷயங்கள் செய்தாலோ அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் என்றே கூறலாம். அந்த வகையில், சமீபத்தில், ஹனி சிங் தனது இசை நிகழ்ச்சி ஒன்றில் தூய்மை பணியாளர் ஒருவருடன் நடனமாடி தலைப்பு செய்தியை உருவாக்கி இன்றயை ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.
View this post on Instagram
ஆம், தூய்மை பணியாளருடன் யோ யோ ஹனி சிங் மேடையில் வைப் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பேசும்பொருள் ஆகியுள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற ஹனி சிங், மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது தூய்மை பணியாளர் ஒருவர் வந்தார்.
பிறகு அந்த பணியாளர் மேடையில் இருந்த குப்பையை அகற்றி கொண்டிருந்த நிலையில், திடீரென அவரை கட்டிப்பிடித்து ஒன்றாக ஹனி சிங் நடனமாடினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த பலரும் ஹனி சிங்கை பாராட்டி வருகிறார்கள்.