தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வரும் இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து ‘ஏழு கடல், ஏழு மலை ‘ எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படம் நடந்து முடிந்த ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மக்கள் பார்க்கவேண்டும் என்று திரையிடப்பட்டது, படம் பார்த்த பலரும் நன்றாக இருப்பதாக கூறியிருந்தார்கள்.
குடும்பத்துடன் குஷி! காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்!
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து படத்தில் இருந்து அப்டேட்டுகள் வெளியாக தொடங்கி இருக்கிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் ‘மறுபடி நீ’ என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தற்போது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை எழுத்தாளர் மதன் கார்க்கி எழுதி உள்ளார். யுவன் இசையில் உருகவைக்கும் வகையில் இந்த பாடல் இருப்பதால் கண்டிப்பாக இந்த பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. இதோ அந்த பாடல்
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…