பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் யாரும் மதிக்க கூட மாட்டிக்காங்க! யாஷிகா ஆனந்த் பேச்சு!

yashika about bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிய வந்த பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம். இவர் தற்போது நடிகர் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை யாஷிகா ஆனந்த் ” பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது யாருமே மதிக்க கூட மாட்டிகிறார்கள். எப்போது வீட்டிற்குள் ஸ்மால் பாஸ் என்கிற விதிமுறை கொண்டு வந்தார்களோ அப்போதே பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் மதிக்காமல் இருக்கிறார்கள். இந்த சீசன் பிக் பாஸ் சீசனை நான் பார்த்த வரையில் எல்லாரும் கலாய்த்து தான் பேசி வருகிறார்கள்.

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

என்னை பொறுத்தவரை பிரதீப்பை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்திருக்கலாம். அவர் வெளியே போன பிறகு தான் பிக் பாஸ் பார்க்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. நாங்கள் இருந்த சீசன்கள் எல்லாம் கமல் சாரை பார்த்து நடுங்குவோம். அந்த அளவிற்கு அவர் அந்த சமயம் எல்லாம் தப்பு செய்தால் கண்டிப்பார்” எனவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை சரியான மரியாதையுடன் நடத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது. இதனால் தான் பெரிய சர்ச்சையே வெடித்தது, பலரும் அவருடைய தரப்பில் இருந்து நியாத்தை கேட்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police