அடடா…அருமை….’கல்லீரல்’ பற்றி கவிதை எழுதிய வைரமுத்து…வைரலாகும் பதிவு.!!
கவிஞர் வைரமுத்து நல்ல நாள் மற்றும் ஏதேனும் பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றாலோ அவர்களை பற்றி கவிதை எழுதி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவார். அவர் பதிவிடும் கவிதையும் இணையத்தில் வைரலாகி விடும்.
அந்த வகையில், வைரமுத்து உலகப் புகழ்பெற்ற கல்லீரல் மருத்துவர் முகமது ரேலா வழங்கிய இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வைரமுத்து கல்லீரல் பற்றி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற
கல்லீரல் மருத்துவர்
முகமது ரேலா வழங்கிய
இஃப்தார் விருந்தில்
கலந்துகொண்டேன்கல்லீரல் ஒரு கழுதை;
எத்தனை
அவமானங்களும் தாங்கும்;
படுத்தால் எழாது என்பார்கள்படுத்த கல்லீரலைக்
குதிரையாய் எழுப்பும்
வல்லவர் ரேலா
வாழ்கவென்றேன்உடன்
அமைச்சர் ஆர்.காந்தி
கலாநிதி எம்.பி pic.twitter.com/EPTKGaEKep— வைரமுத்து (@Vairamuthu) April 17, 2023
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” கல்லீரல் ஒரு கழுதை எத்தனை அவமானங்களும் தாங்கும். படுத்தால் எழாது என்பார்கள் படுத்த கல்லீரலைக் குதிரையாய் எழுப்பும் வல்லவர் ரேலா வாழ்கவென்றேன்” என பதிவிட்டுள்ளார்.
அருமை சிறப்பு மகிழ்ச்சி கல்லீரலை வளப்படுத்தும் நாயகன் ரேலா சேவை நூறாண்டு கடந்து மக்களுக்கு பயன்பட வேண்டும் இப்தார் வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணா
— Mani Karthik GK (@31764_94433) April 17, 2023
இந்த கவிதையை பார்த்த ஒருவர் ” அருமை சிறப்பு மகிழ்ச்சி கல்லீரலை வளப்படுத்தும் நாயகன் ரேலா சேவை நூறாண்டு கடந்து மக்களுக்கு பயன்பட வேண்டும் இப்தார் வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணா” என பதிவிட்டுள்ளார்.