ஆஹா…சைலண்டாக சம்பவம் செய்யும் “பிளாக்”…வசூல் எவ்வளவு தெரியுமா?
பிளாக் படம் வெளியான 9 நாட்களில் மொத்தமாக தமிழகம் முழுவதும் மொத்தமாக 5.05 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நமக்கு இவ்வளவு பெரிய ஹிட் படம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என ஜீவா கூட கனவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள பிளாக் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அவரே படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது ” நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய படத்தின் வெற்றி விழாவுக்கு வருகிறேன்” எனக் கூறியிருந்தார்.
அந்த அளவுக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா படம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய் கொண்டாடி வருகிறார்கள். படம் வெளியாகும்போது என்னவோ எதிர்பார்ப்புகள் இல்லாமல் தான் வெளியானது. சாதாரணமாக வரும் த்ரில்லர் படம் தானே எனப் படத்தைப் பார்க்கவும் முதல் 2 நாட்களில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. படத்தில் திரில்லர் உடன் சேர்ந்து பல சஸ்பென்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, படம் பார்த்த பலரும் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களைக் கூறிய காரணத்தால் அடுத்தடுத்த நாட்களில் படத்தைப் பார்க்க மக்கள் திரையரங்கிற்கு செல்ல தொடங்கிவிட்டார்கள். படமும் அமோக வரவேற்புக்கு மத்தியில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தீபாவளி அன்று தான் பெரிய படங்கள் வெளியாகிறது என்பதால் அதுவரை பிளாக் படம் வெற்றிகரமாக ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சைலண்டாக சம்பவம் செய்துகொண்டு இருக்கும் இந்த பிளாக் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியான 9 நாட்களில் மொத்தமாக தமிழகம் முழுவதும் மொத்தமாக 5.05 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் கடந்த சனிக்கிழமை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1.25 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் 2 கோடிகள் வரை தான் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி வசூல் செய்து படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்து பிளாக் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.