ஆஹா…தனது தம்பியுடன் கொஞ்சி விளையாடும் தளபதி விஜய்…வைரலாகும் புகைப்படம்.!!
நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சிறிய வயதில் தனது உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பல இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், விஜய் தனது சிறிய வயதில் தனது சகோதரர் விக்ராந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
Vijay & Vikranth! pic.twitter.com/eIKCYYzDOK
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 22, 2023
விக்ராந்த் வேறு யாருமில்லை இப்பொது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான். அவர் விஜயின் கூட பிறந்த சகோதரர் இல்லை உறவினர் வகையில் சகோதரர் தான். இவர்கள் இருவரும் சிறிய வயதில் கொஞ்சி விளையாடிய அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.