உழைக்கும் கடவுள்களே! உங்களுக்கெல்லாம் நன்றி – கவிஞர் வைரமுத்து

Default Image

மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில், கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கொடூர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், பல நாடுகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.
இதனை பாராட்டி அவர்களுக்கு, நன்றி சொல்லும்  வகையில், இவர்களுக்காக கவிஞர் வைரமுத்து ஒரு பாடலை எழுத,  அப்பாடலுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். இதோ அந்த பாடல்,

உழைக்கும் கடவுள்களே
உங்களுக்கெல்லாம் நன்றி!
அழைக்கும் வேளையிலே – எங்கள்
ஆரூயிர் காப்பீரே – உங்கள்
அத்தனை பேர்க்கும் நன்றி!
இதயத்திலிருந்து
சொற்கள் எடுத்து
எடுத்த சொற்களைத்
தேனில் நனைத்து…
வாரி வழங்குகின்றோம் – உம்மை
வணங்கி மகிழுகின்றோம்!
மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும்
மானுடக் கடவுள் மருத்துவர்கள்!
தேவை அறிந்து சேவை புரியும்
தேவதை மார்கள் செவிலியர்கள்!
பயிரைக் காக்கும் வேர்கள் போல
உயிரைக் காக்கும் ஊழியர்கள்!
வெயிலைத் தாங்கும் விருட்சம் போல
வீதியில் நிற்கும் காவலர்கள்!
தூய்மைப் பணியில் வேர்வை வழியத்
தொண்டு நடத்தும் ஏவலர்கள்!
வணக்கமய்யா வணக்கம் – எங்கள்
வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள்
தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே
தேசியக் கொடியும் பறக்கும்!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return