பெண்கள் எழுவது வீழ்வதற்காத்தான்… திமிர் பேச்சுக்கு சமந்தா கொடுத்த பதிலடி…!
யசோதா திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக சரித்திர கதையம்சம் கொண்ட ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகை சமந்தா நேற்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததோடு ட்வீட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார். ரசிகர்கள் கேட்ட பல முக்கியமான கேள்விகளுக்கு சமந்தா மனம் திறந்து பதில் அளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் ” பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராங்கி, கனெக்ட்,டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய 4 படங்களுக்கான பேனர் புகைப்படத்தை வெளியீட்டு ‘தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் செல்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்று நினைத்து பார்க்க முடியாது” என பதிவிட்டுருந்தார்.
அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “பெண்கள் எழுச்சி பெறுகிறார்கள்” என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் “பெண்கள் எழுவது விழுவதற்காகத்தான்” என சற்று திமிராக பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகை சமந்தா ” ”விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே” என சாந்தமாக பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.