ஜப்பான் படத்தை மிஞ்சியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ? முதல் நாள் வசூல் விவரம் இதோ!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியானது. இந்த படங்களில் முதல் நாளில் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஜப்பான்
குக்கூ இயக்கிய இயக்குனர் ராஜூ முருகன் கார்த்தியை வைத்து இந்த ஜப்பான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைபடத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானு வேல் நடித்துள்ளார். நடிகர் சுனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தீபாவளி ஜப்பான் பட்டாசு வெடித்ததா…நமத்து போனதா? திரைவிமர்சனம்
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகும் போதே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்றே சொல்லலாம். எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் இல்லை என்ற காரணத்தால் படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் சுமாராக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தின் முதல் பாகத்தை போல இரண்டாவது பாகம் அருமையாக இருக்கும் காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், கண்டிப்பா அதனை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் விவரம்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக கார்த்தியின் ஜப்பான் படம் இருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 2.7 கோடியும், உலகம் முழுவதும் 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதைப்போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 1.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. ஜப்பான் படத்தை விட குறைவாக வசூல் செய்திருந்தாலும், அந்த படத்தை விட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை இந்த படம் பெற்று இருக்கிறது. எனவே, வரும் தீபாவளி விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.