சிறகடிக்க ஆசை இன்று: முத்துவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயா..

sirakadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியல்– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் [ஜூன் 11] இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

முத்து தன் நண்பரிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது எப்போதும் போல் எதர்ச்சியாக பேசிய வார்த்தையால் மனமுடைந்த மீனா வீட்டை விட்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் இன்று ரோகினி சமையல் செய்திருக்கிறார். இதை மனோஜ் , விஜயா, ரவி சாப்பிட்டுக் கொண்டே ரோகினியின் சமையலை கிண்டல் அடிக்கிறார்கள்.

விஜயா அண்ணாமலையிடம் சாப்பிட வருமாறு கூப்பிடுகிறார். அண்ணாமலை மீனாவை காணாத பதட்டத்தில் இருக்கிறார். அப்போதும் மீனாவை விஜயா திட்டுகிறார். அதற்கு அண்ணாமலை, மீனாவை காணோம் என்ற அக்கறை கூட இல்லை அப்போ சமைக்க மட்டும் தான் மீனா வா என்று திட்டுகிறரர்.

இப்போது அங்கு முத்து வருகிறார். அண்ணாமலை முத்துவிடம், நீ மீனாவிடம் சண்டை போட்டியா என கேட்கிறார். இல்லை அப்பா என கூறிவிட்டு தன் நண்பனிடம் பேசியவற்றை கூறுகிறார். ஒருவேளை இதை தவறாக புரிந்து கொண்டு விட்டாலோ  என சொல்கிறார். அதனால் அண்ணாமலையும் முத்துவை திட்டுகிறார்.

விஜயா இப்போது முத்துவிற்கு சப்போர்ட் செய்யும் விதமாக  இன்னும் ஏன் அவளை தலையில் கட்டிக்கிட்டு இருக்கணும் போகட்டும் விடுங்க என சொல்கிறார். இப்போது மீனா ஓட தங்கச்சி முத்துவிற்கு ஃபோன் பண்ணி கந்து வட்டி சுதாகர் மீது சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்.

முத்து கந்து வட்டி சுதாகரை பார்க்க செல்கிறார். அவர் கை கால்களில் அடிபட்டு படுத்திருக்கிறார். அவரைப் பார்த்த முத்து இந்த நிலையில் மீனாவே கடத்தியிருக்க  வாய்ப்பில்லை என புரிந்து கொள்கிறார்.

மனோஜ் விஜயாவை பயமுறுத்துகிறார்;

மனோஜ் விஜயாவிடம் மீனா ஏதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஏதாவது செய்திருப்பாலோ என விஜயாவை பயமுறுத்துகிறார். விஜயாவும் பயந்து போய்  அப்படியெல்லாம் இருக்காது ஏதாவது கோவில்ல இருப்பா என சமாளித்து செல்கிறார்.

இந்த நிலையில் சிட்டி மீனாவின் தம்பியிடம் அக்காவை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்குமாறு மீனாவின் தம்பி உசுப்பேத்தி விடுகிறார். சிட்டி முத்துவை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற குறிக்கோளோடு கூறுகிறார்.

அதே சமயத்தில் முத்துவின் நண்பன் முத்துவிடம் டைம் ஆகிவிட்டது பேசாம நீ போய் போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிரு என்று கூறுகிறார். இதைக் கேட்டு முத்துவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைக்கான எபிசோட் முடிவடைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer