Categories: சினிமா

சிறகடிக்க ஆசை இன்று – ஸ்ருதியின் அம்மாவால் குடும்பத்தில் கலகம் வெடித்தது..!

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை சீரியல் – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூன் 26]கதைக்களத்தை இப்பதிவில் காணலாம்.

விஜயாவின் எல்லை இல்லா சந்தோசம் ;

ஸ்ருதியின் அம்மா 5 லட்சம் செக்குடன் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.  அண்ணாமலையுடன் வீடு கட்ட போறத பத்தி விசாரிக்கிறாங்க. அப்போ  அவங்களும் விஜயாவும் ஆமா சம்மந்தி அப்படின்னு சொல்றாங்க.. உங்களுக்கு வீடு கட்ட ஸ்ருதி அப்பா  செக் குடுத்து விட்டுருக்காரு  அப்படின்னு சொல்றாங்க .

இத பாத்ததும்  விஜயாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோஜ் ரோகினி கிட்ட சொல்றாரு அப்போ இனிமே மாச மாசம் நம்ம பணம் கொடுக்க தேவையில்லை அப்படின்னு சொல்றாரு அதுக்கு ரோகிணியும் இரு பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க. இப்போ முத்து வராரு என்ன இவங்க கையில பில்லோட வந்துருக்காங்க அப்படின்னு கேக்குறாரு. உடனே மனோஜ் சொல்றாரு நம்ம வீடு கட்டறதுக்கு அஞ்சு லட்சம் செக் கொண்டு வந்து இருக்காங்க .

உதவியை மறுக்கும் முத்து ;

நீங்க ஏன் எங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைக்கிறீங்க யாராவது கஷ்டப்படுறவங்களுக்கு பண்ணலாம் இல்ல. நாங்க தான் நல்லா கை காலோட இருக்கிறோமே எங்களுக்கு ஏன் குடுக்குறீங்கன்னு கேக்குறாங்க .சம்மந்தி  ரிட்டயர் ஆயிட்டாரு அதனால தான் அவர் கஷ்டப்பட வேண்டாம்னு  குடுக்குறோம்னு சொல்றாங்க.. இப்ப ஸ்ருதியும் சொல்றாங்க மம்மி நான் உங்ககிட்ட பணம் எதுவும் கேட்கலையே அப்படின்னு சொல்றாங்க..

ஏன் ஸ்ருதி, கேட்டா தான் கொடுக்கணுமா அப்படின்னு சொல்லிட்டு விஜயா கிட்ட கொடுக்க போறாங்க ..ரவி வாங்காதீங்கன்னு கண்ண காட்டுறாரு உடனே விஜயாவும் உட்கார்ந்துறாங்க . அண்ணாமலையும் வேண்டாம் என்று சொல்லிடறாரு. இப்போ ஸ்ருதியோட அம்மா சொல்றாங்க  என்ன சம்மந்தி நீங்களும் இப்படி சொல்றீங்க அப்படின்னு கேக்குறாங்க.

இப்போ மீனா சொல்றாங்க நீங்க எதாச்சும் பண்ணனும்னா உங்க பொண்ணுக்கு பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்றாங்க முத்துவும்  கரெக்டா சொன்ன மீனா. அவங்க கிட்ட கொடுத்து  இடம் வாங்கி வீடு கட்டிக்க சொல்லுங்க அப்படின்னு சொல்லுறாரு . இப்போ விஜயா முத்துவை திட்டுறாங்க ..

முத்துவிடம் அடி வாங்கும் மனோஜ் ;

நீ  ஸ்ருதியும் ரவியும் வெளியே அனுப்பி விட பார்க்கிறாயா அதுக்கப்புறம் மனோஜையும் ரோகிணியும் அனுப்பலாம்னு நினைக்கிற போல அப்படின்னு விஜயா  சொல்றாங்க. அதுக்கு மனோஜும்  எங்க எல்லாத்தையும் வெளியில அனுப்பிவிட்டு இவனும்   இவன் பொண்டாட்டியும்  மட்டும் இந்த வீட்ல இருக்கலாம் நினைக்கிறான்  சுயநலவாதி அப்படின்னு சொல்றாரு.

இதைக் கேட்ட முத்துவுக்கு கோவம் வருது  மனோஜ அடி அடின்னு அடிக்கிறாரு .இப்போ விஜயா சொல்றாங்க ஏன்டா இப்படி சம்மந்தி முன்னாடி அசிங்கப்படுத்துறேன்னு கேக்குறாங்க. இதுக்கு தானே அவங்க ஆசைபட்டாங்க  அப்படின்னு  சொல்றாரு. இப்போ ஸ்ருதி சொல்றாங்க என் மம்மி ஹெல்ப் பண்ணனும் தானே வந்தாங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு கேக்குறாங்க.

இப்போ மனோஜ்  சொல்றாங்க இந்த வீட்ல பெரிய பையன் நான் தானே எல்லாம் முடிவும் நீங்களே ஏன் எடுக்கறீங்க அப்படின்னு கேக்குறாரு. ஸ்ருதியோட அம்மாவும் கிளம்பிடறாங்க
. ஸ்ருதியும் ரூமுக்கு போய் ரவி கிட்ட கேக்குறாங்க உங்க அண்ணன் ஏன் இப்படி இருக்கிறாரு ஈகோ மைண்டோட .அம்மா ஹெல்ப் பண்ணலாம்னு தானே வந்தாங்க.

இதுக்கு ரவி சொல்றாரு நீ ஏன் இங்க நடக்கிறது எல்லாம் உங்க அம்மா கிட்ட சொல்ற. நான் நமக்குள்ள நடக்கிற விஷயத்தை ஏதாவது எங்க அப்பா அம்மா கிட்ட சொல்றேன்னா இனிமேல் நீ வீட்ல எல்லாம் சொல்லாத இத நான் ரிக்வஸ்ட்டா கேட்டுக்குறேன் சொல்றாங்க. இதுக்கப்புறம் சுருதியும் மனோஜ் சொல்ற மாதிரி முத்து இந்த வீட்ட  எடுத்துக்கலாம் நினைக்கிறாரா அப்படின்னு கேக்குறாங்க.

வீட்டிற்கு போதையில் வரும் முத்து ;

அதுக்கு ரவி சொல்றாரு மனோஜ் வேணாம் அப்படி நினைப்பா ஆனா முத்து எப்பவுமே அப்படி நினைக்க மாட்டான் அப்படின்னு சொல்லிடுறாரு .முத்துவும் செல்வமும் பார்ல குடிக்கிறாங்க செல்வத்து கிட்ட  வீட்ல நடந்த பிரச்சனை எல்லாம் சொல்றாரு. செல்வமும் நக்கலா பேசாம அந்த அஞ்சு லட்சத்தை   நீங்க வாங்கி வீடு கட்டி இருக்கலாம்.

அதுக்கு முத்து சொல்றாரு போயும் போயும் அந்த ஆளோட பணம் எனக்கு தேவையில்லை அப்படின்ற மாதிரி சொல்றாரு அப்படியே குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றாரு.. மீனாவும் அதை புரிஞ்சுக்கிறாங்க. அதோட இன்னைக்கு ஒரு எபிசோடு முடிந்தது.

நாளைக்கு ப்ரோமோல முத்து காலையிலேயே மணி அடிச்சு சாமி கும்பிட்டு இருக்காரு.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு நாளைக்கு  எபிசோடு தெரிஞ்சுக்கலாம்.

Published by
K Palaniammal

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

3 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

4 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

6 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

7 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

8 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

8 hours ago