சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய[june28 ]கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் காணலாம்.
முத்து காலையிலேயே பூஜை செய்துவிட்டு அண்ணாமலையுடன் இனிமே உன் மனச கஷ்டப்படுத்த விரும்பலப்பா அப்படின்னு சொல்றாரு ..உடனே அதுக்கு மனோஜ் கவுண்டர் கொடுக்குறாரு ஏன் நீயும் உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போறீங்களா அப்படின்னு.முத்து சொல்லுறாரு அந்த ரூமை அவங்க ரெண்டு பேருமே எடுத்துக்கட்டும்பா எனக்கும் மீனாவுக்கு ரூம் எல்லாம் வேண்டாம்னு சொல்கிறார்.
மீனாவும் இவரே சம்பாரிச்சு மாடில ரூம் கட்டிருவாரு மாமா நீங்க எதுக்குமே கவலைப்படாதீங்க யார் முன்னாடியும் தலை குனிந்து நிக்க வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க.. இப்ப முத்து மீனாவை இழுத்து ஏய் அப்படின்னு சொல்லிட்டு திரும்பவும் சபதம் போட்டுட்டாலே அப்படின்னா நினைக்கிறாரு.. இப்போ மனோஜ் சொல்றாரு அப்போ மாசம் மாசம் பணம் கொடுக்க தேவையில்லை அதான் அவனே கட்டிக்கிறேன்னு சொல்லிட்டானே அப்படின்னு அண்ணாமலை கிட்ட சொல்றாரு
ரவியும் ஸ்ருதியும் ஆனா நாங்க மாசம் மாசம் கொடுத்து விடுகிறோம் அப்படின்னு சொல்றாங்க .மீனா வேண்டாம் சொல்றாங்க இப்ப ஸ்ருதி சொல்றாங்க மீனா உங்களோட இந்த கான்பிடன்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்னு பாராட்டுறாங்க. முத்து மீனாவை கிச்சன்ல கூட்டிட்டு போயிட்டு செல்லம்மா ஒரு அடியை போடுறாரு. மீனாவும் ஏங்க அடிக்கிறீங்க அப்படின்னு கேக்குறாங்க..
இப்ப முத்து சொல்றாரு நீ பாட்டுக்கு அன்னைக்கு நகையை நானே வாங்கி தருவேன் சபதம் போட்ட இப்ப ரூம நாங்களே கட்டுகிறோம்னு சொல்லிட்ட அதையே இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கேன் வாய வச்சிட்டு கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் இல்ல மீனா அப்படின்னு கேக்குறாரு .உங்களால முடியுங்க அப்படின்னு மீனா சொல்றாங்க.
நாம இன்னொரு கார் வாங்கி அதை வாடகைக்கு விட்டால் அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க இதுக்கு முத்துவும் .இந்த ஐடியா நல்லா தான் இருக்கு அப்படின்னு சொல்றாரு. இப்போ மனோஜ் கடைக்கு ரோகிணி வராங்க நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஒரு மேரேஜ் பங்சனுக்கு ஓஎம்ஆர் போனும்னு சொல்றாங்க.
அதுக்கு மனோஜ் சொல்றாரு ஷோரூம யார் பார்த்துக்குவா.. ஒரு நாள் தானே ஸ்டாப் யாராச்சும் பாத்துக்கட்டும்னு சொல்றாங்க உடனே மனோஜ் சரினு சொல்கிறார் .இப்போ மனோஜ்க்கு ஒரு கால் வருது அதுல நிறைய ஆர்டர்ச வருது மனோஜ் ரோகினி கிட்ட ரோகிணி பெரிய ஆர்டர் வந்திருக்கு கிட்டத்தட்ட நாலு லட்சத்துக்கு சேல் ஆகும்பா அதனால நான் வரல நீ மட்டும் போயிட்டு வா அப்படின்னு சொல்லிறாரு.
ரோகினையும் அதை புரிஞ்சிக்கிட்டு ஓகே அப்படின்னு சொல்லிடறாங்க. இப்போ முத்து மீனாவுக்கு கால் பண்ணி கீழ வர சொல்றாங்க ,மீனா போயி என்னங்க ன்னு கேக்குறாங்க கார் டிக்கியை ஓபன் பண்றாரு செங்கல் இருக்கு அத பாத்துட்டு மீனா சிரிச்சுக்கிட்டு என்னங்க செங்கல் இருக்கு அப்படின்னு கேக்குறாங்க.. முத்து சொல்றாங்க
வீடு கட்டுறத்துக்கு அப்படின்னு சொல்லவும் மீனா இத வச்சு எப்படி வீடு கட்டுவது என்று கேட்கிறார்கள். ரெண்டு பேரும் அத வச்சு ஒரு பிளானே போடுறாங்க இப்ப வீட்டுக்குள்ள எடுத்துட்டு போறாங்க. விஜயா பாத்துட்டு என்ன ரூம் கட்டறேன்னு சொல்லிட்டு ஹோமம் வளக்க செங்கல் எடுத்துட்டு போறீங்க.. இப்படியே போனா உங்களோட அறுபதாம் கல்யாணத்துக்கு தான் நீங்க ரூம் கட்டுவிங்கன்னு நக்கலா சொல்றாங்க..
மீனாவும் அத பெருசா எடுத்துக்காம சிரிச்சிட்டே போயிடறாங்க இப்ப முத்து சொல்றாரு அப்பா பாருப்பா மீனா அம்மா சொன்னதுக்கு பெருசா எதுவும் எடுத்துக்கல அப்படின்னு சொல்றாரு. விஜயாவும் எப்பவும் கண்டதையும் குடிச்சிட்டு பேசுவ இன்னைக்கு கல்ல கையில வச்சுட்டு பேசுறேன்னு சொல்றாங்க.
மீனாவும் முத்துவும் மாடியில செங்கலை அடுக்கி வச்சு பார்த்து சந்தோஷப்பட்டு இருக்காங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு நாளைக்கு எபிசோடு காணலாம்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…