சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவின் மாய வலையில் மனோஜ் சிக்குவாரா?

siragadikka asai 13

சிறகடிக்க ஆசை இன்று  -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஜூலை 13] எபிசோடை இங்கே காணலாம்.

ஒரு வழியா மனோஜ் ஏமாந்த விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சு. விஜயா மனோஜ அடி அடின்னு அடிக்கிறாங்க ..ரோகினி அத தடுத்து நிறுத்தி விடுங்க  ஆன்ட்டி அவர் தானே ஏமாந்தாரு வேற யாரையும் ஏமாத்தலையே அப்படின்னு சமாதானம் பண்ணி ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாரு. இப்ப மனோஜ் ரோகிணி கிட்ட சாரி சொல்றாரு .

என் மனோஜ்  என்கிட்ட சொல்லல அப்படின்னு கேட்கவும் நீ என்னை முட்டாள்னு நினைச்சிடுவேன்னு தான் ரோகிணி நான் சொல்லல . ஆன்ட்டி இத்தனை நாளும் நீ என்ன பண்ணாலும் கோபப்படல ஆனா இன்னைக்கு உன்னை கோவப்பட்டு அடிச்சிருக்காங்க பாரு அவங்க கிட்டயாவது நீ சொல்லி இருக்கலாம் இல்ல அப்படின்னு கேக்குறாங்க அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் ரோகினி என்னை காப்பாற்றுவதற்காகவே அம்மா  அடிச்சாங்க. அதைக் கேட்டு ரோகிணிக்கு அதிர்ச்சியாகுது. இப்ப மனோஜ்  சொல்றாரு இன்னொரு ஒரு விஷயம் சொல்ற ரோகிணி நீ கோவ  படக்கூடாது .

muthu, rogini

ரோகிணி சொல்றாங்க என்னன்னு சொல்லு..  மனோஜ் மீனாவுடைய நகையை மாத்துன  விஷயத்தை சொல்றாரு இத கேட்டு ஏய் என்ன மனோஜ் இப்படி இருக்க உனக்கு மீனாவோட நகை  தான் கெடச்சதா இந்த விஷயம் முத்துவுக்கு தெரிஞ்சது  என்ன நடக்கும் தெரியுமா உன் கைய ஒடச்சிடுவான். ரோகிணி அதுக்குள்ள நம்ம நகையை மாற்றி வைத்துவிடலாம் அப்படின்ற மாதிரி சொல்றாரு. கண்டிப்பா இத முத்து அப்படியே விட மாட்டாரு நம்பி இருக்கவும் மாட்டார் இதை கண்டுபிடிக்காம விட மாட்டார் பாரு அப்படின்னு சொல்றாங்க.

என்னையும் சேர்த்து நீ அசிங்க படுத்துற மனோஜ் அப்படின்னு அழுதுகிட்டே பெட்ல உட்கார்றாங்க ..சரி என்கிட்ட நீ இந்த விஷயத்தை சொன்னதை ஆன்ட்டிக்கு தெரிய வேணாம்னு சொல்லிடறாங்க மனோஜும் சரின்னு சொல்றாங்க. இப்ப முத்துவும் மீனாவும் கிச்சன்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க முத்து சொல்றாரு அம்மா அடிச்சதுல எனக்கு சந்தேகம் இருக்கு கண்டிப்பா மனோஜ் தப்பிக்கிறதுக்காக தான் அப்படி பண்ணி இருப்பாங்க .

அதுக்கு மீனா சொல்றாங்க இல்லங்க இந்த நகையை உங்க தம்பி எடுக்கலைன்னு தான் எனக்கு தோணுது. இல்ல மீனா நீ அம்மா அடிக்கும்போது கவனிச்சியா அவங்க சொன்னது எல்லாமே அவனுக்கு எடுத்துக் கொடுத்தது மாதிரி இருந்துச்சு ஆனா அதை புடிச்சுகிட்டு தான் கடன் வாங்குனேனு சொன்னான் இல்லைனா  எல்லாம் சொல்லி இருப்பான்.  இத பத்தி அவனோட பார்க் ப்ரண்ட் கிட்ட விசாரிச்சா  உண்மை வெளிய வந்துரும்னு சொல்றாரு

muthu,meena

இப்போ சுருதி ரவி கிட்ட உங்க வீட்டில என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமே இல்லனு சொல்றாங்க தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்துட்டே இருக்கு. இந்த விஷயத்தை பத்தி நீ என்ன நினைக்கிற ரவின்னு கேக்குறாங்க. அதுக்கு ரவி சொல்றாரு எனக்கும் மனோஜ் மேல தான் சந்தேகமா இருக்கு .ஆனா நம்ம இந்த விஷயத்துல தலையிட வேண்டாம் என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பார்ப்போம் . இப்போ முத்து மனோஜ் ஓட பார் பிரண்ட் பாக்க போறாரு.

அங்க அந்த பார்க் பிரண்ட் வட்டி கொடுத்த கணக்கெல்லாம் எழுதிட்டு உட்கார்ந்திருக்கிறார். முத்து போய் ஹாய்னு சொல்றாரு வாங்க நீங்க மனோஜோட தம்பி தானே சொல்றாங்க.. ஆமா அப்படின்னு முத்து சொல்றாரு .. இன்னொரு கார் வாங்கி வாடகைக்கு விட போறேன் அதுக்கு தான் உங்ககிட்ட ஒரு ரெண்டு லட்சம் இருக்குமான்னு கேக்கலாம்னு வந்தேன் அப்படின்னு சொல்றாரு.

இதைக் கேட்ட பார்க் பிரண்ட்  அந்த அளவுக்கு எல்லாம் இருந்தா நான் ஏன் ப்ரோ இப்படி உட்கார்ந்து இருக்கிறேன் .என்கிட்ட லிமிட்  20 ஆயிரம் தான் அதுக்கு மேல எல்லாம் நான் யாருக்கும் வட்டி கொடுக்கிறது இல்ல அப்படின்னு சொல்றாரு. அதுக்கு முத்து சொல்றாரு என்னங்க மனோஜ்க்கு மட்டும் நாலு லட்சம் கொடுத்து இருக்கீங்க அப்படின்னு சொல்றாரு. நாலு லட்சமா அவர் சொன்னாரா இல்லையே நான் அவ்வளவு அமௌன்ட் எல்லாம் கொடுக்கலையே

muthu (2)

அப்போ உங்க கிட்ட வாங்கலையா  வேற எங்கேயோ வாங்கி இருப்பான் போல. அப்படின்னு முத்து சொல்றாரு உங்க தம்பிக்கு 20,000 குடுத்துட்டு அத வாங்குறதுக்கு என்னை சென்னைய  சுத்தி காட்டுனவரு அவருக்கு போய் இவ்வளவு அமௌன்ட் என்னால எப்படி கொடுக்க முடியும் . சரி நீங்க உங்க கணக்கு பாருங்க எனக்கு முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு அதை நான் பார்க்கிறேன்னு சொல்லிட்டு முத்து கிளம்பிட்டாரு.

இப்போ மீனா கிட்ட போயி மீனா  அந்த பார்க் பிரண்டை போய் பார்த்தேன் அவர்கிட்ட அவன் கடன் வாங்கலேன்னு சொல்றாரு. அப்போ கண்டிப்பா நகையை  இவன் தான் மாத்தி இருப்பான்னு உறுதியாக சொல்றாரு .ஆனா இதை எப்படி கிளியரா கண்டுபிடிக்கிறது தான் தெரியல அப்படின்னு சொல்லவும் அதுக்கு மீனா சொல்றாங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு சாமியார் இருக்கிறார்கள் அவர் மை போட்டு பார்ப்பாரு அப்படின்னு  சொல்றாங்க.

முத்து நக்கலா  ஏன் அவரு சிசிடிவி கேமரா வைத்திருக்கிறாரா அப்படின்னு கேக்குறாங்க. இல்லங்க அதெல்லாம் ஒரு நம்பிக்கை நிறைய பேருக்கு அந்த மாதிரி கண்டுபிடிச்சிருக்காங்க. உடனே முத்து  சொல்றாரு இதெல்லாம் நீ இப்ப நம்பிட்டு இருக்குற நீ சொன்னதுல இருந்து எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்குது நீ வீட்டுக்கு போ நான் வரேன் அப்படின்னு சொல்லிட்டு முத்து காய்கறி கடைக்கு போறாரு அங்கே போய் கடைக்காரர் கிட்ட ஒரு எலுமிச்சம் பழம் கேக்குறாரு

MUTHU (3)

எலுமிச்சம் பழம் சந்தனம் குங்குமம் தண்ணி எல்லாமே கேக்குறாரு உடனே கடைக்காரர் எடுத்துக் கொடுக்கிறார் முத்து முகத்தை கழுவிட்டு  பட்டைய போட்டுட்டு அந்த எலுமிச்சம் பழத்தை சந்தனம்  குங்குமத்த தடவி நூல சுத்திடுறாரு இப்போ  இதை மடிச்சு எடுத்துட்டு வீட்டுக்கு போறாரு அதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது .

நாளைக்கான ப்ரோமோல வீட்டுக்கு போனதும் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜை ரூம்ல வைக்க சொல்றாரு சாமியார்கிட்ட இருந்து மந்துருச்சு வாங்கிட்டு வந்து இருக்கேன் இதை வீட்ல வைக்க சொன்னாரு ரெண்டு நாளைக்குள்ள யாரு நகையை  எடுத்தாங்களோ அவங்களுக்கு ஒரு சைடு வாய் இழுத்துரும் அப்படினு  சொல்லி இருக்காங்க .இதைக் கேட்ட விஜயாவுக்கு மனோஜ்க்கும் கதி கலங்கி போயிடுறாங்க. நாளைக்கு எபிசோட்ல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi