சிறகடிக்க ஆசை சீரியல்.. குழந்தைக்காக ஜோசியரை பார்க்க சென்ற மனோஜ்..! ஆத்திரத்தில் ரோகினி..!

Manoj,Rohini (2) (1)

 சென்னை– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஆகஸ்ட் 21] காட்சிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முத்து மீனாவ திட்டுனத நெனச்சு விஜயா சந்தோஷப்படுறாங்க.. பையன் குடிச்சிட்டு வந்தா சந்தோசப்படுற முதல் அம்மாவ இப்பதான் பார்க்கிறேன்..அப்படின்னு மீனா சொல்றாங்க. காலையில மீனா அண்ணாமலைக்கு காபி கொடுக்குறாங்க .. முத்துவை பத்தி அண்ணாமலை விசாரிக்கிறாரு.. இப்ப முத்துவும் வந்துட்டாரு என்னடா நைட் லேட்டா வந்தியா? ஆமாப்பா சவாரி போயிட்டு வர லேட்டாயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க.. சரி போய் காபி குடினு  சொல்றாங்க. மீனா காபி  கொடுக்குறாங்க அதுக்கு முத்து புருஷன் பேச்சை பொண்டாட்டி கேட்கலைனா அவ கையால காபி குடிக்க கூடாது சரக்கு இருந்தா எடுத்துட்டு வா ன்னு சொல்லிடுறாரு . மீனா காபியை எடுத்துட்டு வா அப்படின்னு விஜயா கூப்பிடுறாங்க.. இப்போ முத்துவோட கார் சாவியை எடுத்து மீனா ஒளிச்சு வச்சுடுறாங்க. இவரை ஒரு வழி பண்ணனும் .

முத்து கார் சாவிய  தேடறாரு. என்னடா தேடுற அப்படின்னு அண்ணாமலை கேக்குறாரு. அப்பா கார் சாவியை காணோம். ராத்திரி நிதானத்துல தானே இருந்திருப்ப அப்படின்னு கேக்குறாரு அண்ணாமலை . விஜயா சொல்றாங்க இவன் என்னைக்கு நிதானத்துல இருந்தா..  அண்ணாமலை மீனாவ  கூப்பிட்டு விசாரிக்கிறார் மீனா அமைதியா இருக்காங்க. விஜயா சொல்றாங்க  இவ அமைதியா இருப்பதிலேயே தெரியலையா கால் தரையில் படாம வந்திருக்காங்கனு .  இந்த  கருமத்தை குடிக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா இப்ப பாரு சாவி எங்க வெச்சேன்னு கூட தெரியல .. மீனா நீதான் இவன திருத்தணும் அப்படின்னு சொல்றாரு. உடனே விஜயா யார் இவளா.. இவன் குடிச்சிட்டு வந்தா தான் இவன் நினைச்ச மாதிரி இருக்க முடியும் .

seetha (2) (1)

மீனா இனிமே குடிச்சிட்டு வந்தா கதவு திறக்காத அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு. மீனாவும் சரின்னு சொல்றாங்க. இப்போ சாவி எடுத்துட்டு வந்து குடுக்குறாங்க சாவி  கிச்சன்ல இருக்குது அப்படின்னு. நைட் நான் கிச்சன் பக்கமே வரல.. அப்பா கிட்ட மாட்டி விட தானே இப்படி சொன்ன நல்ல நடிக்கிற அப்படின்னு சொல்றாரு முத்து . நீங்க குடிக்க கூடாதுன்னு தான் அப்படி பண்ணுனேன்னு மீனா சொல்றாங்க .என் பொண்டாட்டி என் பேச்சை கேக்கலைன்னா நான் எப்படி இருந்தா என்ன அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடறாங்க முத்து. இப்போ முத்து கார் செட்டில் செல்வம் கூட பேசிட்டு இருக்காரு அங்க மீனாவோட அம்மாவும் சீதாவும் வராங்க.. என்னத்த இங்க வந்து இருக்கீங்க அப்படின்னு கேக்குறாரு முத்து.

மீனாவ நான் தான் மாப்பிள்ளை வர சொன்னேன் நீங்களே அவளை ஒதுக்கி வச்சா எப்படி மாப்பிள்ளை அவ கிட்ட பேசுங்க அப்படின்னு சொல்றாங்க. அவளுக்கு என்ன விட அவ தம்பிதான் பெருசா போயிட்டான் . அவை என்னை மதிக்கல. அப்படின்னு சொல்றாரு .நேத்து சத்யா என்ன  கூழ் ஊத்துற இடத்துக்கு வரக்கூடாது தானே சொன்னான். மீனாவோட அம்மா சொல்றாங்க மாப்பிள்ளை அவன் ஏதோ புத்தி கெட்ட தனமா சொல்லிட்டான் அப்படின்னு சமாதானப்படுத்துறாங்க.. ஆனா முத்து சொல்றாரு அவன்  ரவுடி பசங்க கூட சுத்துறான் அவன் பண்ற தப்ப கண்டிக்காம பிறந்த நாள் கொண்டாடினா எப்படி திருந்துவான்.. அதனால தான் நான் மீனாவ போவேன்னு சொன்ன.. மத்தபடி அவன்  எனக்கு எதிரி எல்லாம் இல்ல அப்படின்னு சொல்றாரு..

இப்போ சீதா சொல்றாங்க அக்காவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. அதுக்கு முத்து சொல்றாரு அதெல்லாம் வெறும் வார்த்தை தான் சீதா. செயல்ல தான் தெரியும் நமக்கு ஒருத்தரை பிடிக்குமா பிடிக்காதானு  .. சரி நீங்க ரெண்டு பேரும் போயி வேலை பாருங்க எனக்கு சவாரி வந்துடுச்சு.. இதெல்லாம் ஒரு விஷயம்னா இங்க வந்து இருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிருறாரு .. இதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது. நாளைக்கு ஆனா ப்ரோமோல மனோஜ் ரோகிணி கிட்ட குழந்தை எப்ப பிறக்கும்னு வா ஜோசியர  போய் பாக்கலாம்னு ரோகினிய   கூப்பிடுறாரு. குழந்தை பொறக்கணும்னா டாக்டர் தான் போய் பார்க்கணும்.. மனோஜ் அப்படின்னு ரோகினி சொல்றாங்க.. டாக்டர பார்க்க ஏன் மனோஜ் பிடிவாதமா இருக்கிறாரு வரப் போற எபிசோடில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்