சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..  

muthu,meena (15) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..

ரோகிணியிடம் உண்மையை கூறும் சிட்டி ;

சிட்டி ரோகினிகிட்ட  உங்க மாமியார் நகை  ஒரு டைம் திருட்டு போச்சு உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. ரோகிணி ஆமான்னு சொல்றாங்க ..அதை எடுத்தது மீனாவோட தம்பி சத்யா தான் .இது முத்துவுக்கும் தெரியும் அதனாலதான் முத்து சத்யாவோட கையை உடைச்சான் இந்த வீடியோ முத்து கிட்ட தான் இருக்கு அதை எப்படியாவது நீங்க ரிலீஸ் பண்ணனும் அத நீங்க பண்ணிட்டா  உங்கள மிரட்டுறவனை நான் உங்க பக்கமே வர விடாம பாத்துக்குறேன் அப்படின்னு சொல்றாரு.. இதைக் கேட்டு ரோகினிக்கு  சந்தோசமான அதிர்ச்சியா இருக்கு.  ரோகினையும் சரின்னு சொல்லிடறாங்க. ரவியும் சுருதியும் வீட்டுக்கு வராங்க.. மீனாவை பார்த்ததும் என்ன மீனா பெரிய கட்டா இருக்கு  என்ன ஆச்சு..அதுக்கு மீனா கீழ விழுந்துட்டேன்னு சொல்றாங்க.

இப்போ அவங்க பேசிட்டு இருக்கும் போதே விஜயா வந்துடறாங்க விஜயாவ  பாத்ததும் ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுற மாதிரி பேச ஆரம்பிக்கிறாங்க..இப்போ  ரோகிணியும்  வராங்க என்னாச்சு மீனான்னு  கேட்க மீனா கீழ விழுந்துட்டாங்கன்னு சொல்லிடறாங்க. இப்ப ரோகினி விஜயா கிட்ட ஆன்ட்டி இன்னைக்கு கோயிலுக்கு போயிருந்தேன் சாமியார் குறி  சொல்லிட்டு இருந்தாரு உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு சொன்னாரு. ஆனா  மீனா உங்களுக்கு நேரம் கெட்ட நேரமா இருக்குன்னு சொல்லி இருக்கிறாருன்னு  சொல்ல மீனா சோகமாயிறாங்க   .இப்போ சுருதி  இப்ப போய் இதெல்லாம் நம்பிட்டு இருக்கீங்களா அவங்க ஏதாவது காசுக்கு  சொல்லி இருப்பாங்க அப்படின்னு சொல்றாங்க. மீனாவோட நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது அப்படின்னு முத்து  சொல்றாரு..

Rohini (3) (1)

முத்துவை பாராட்டும் ரோகிணி ;

ஸ்ருதியும் ரவியும் தூங்கிட்டு இருக்கும்போது ரவியோட ரெஸ்டாரன்ட் ஓனரோட பொண்ணு நீத்து  கால் பண்றாங்க புதுசா ஒரு டிஷ் பத்தி நம்ம டிஸ்கஸ் பண்ணனும் அதுக்கு தான்  கால் பண்ணேன் அப்படின்னு சொல்றாங்க.. இப்போ வெளிய போய் ஸ்ருதி பேச சொல்றாங்க அவரும் வெளியில வந்துட்டாரு இப்ப முத்துவும்  மனோஜும் என்னடா இந்த  நேரத்துல போன் பேசிட்டு இருக்குற அப்படின்னு கேட்டுட்டு அவங்களும் போய் தூங்கு போயிடுறாங்க .ஆனா சுருதிக்கு கொஞ்சம் பொறாமை வந்துடுது என்ன அவ இந்த நேரத்துல எல்லாம் போன் பண்ணுவாளா அப்போ நீ வேலை செய்யும்போது நான் கால் பண்றேன் நீ கட் பண்ணாம என்கிட்ட பேசணும் அப்படின்னு சொல்றாங்க அதுக்கு ரவி சொல்றாரு என்னடி இது புதுசு புதுசா சொல்லிட்டு இருக்க .. ஆமா அதெல்லாம் அப்படித்தான்.

இப்போ காலையில மீனா கிச்சன்ல சமைச்சுட்டு இருக்காங்க முத்து வராரு உன்னைய தான் சமைக்க கூடாதுன்னு நான் சொன்னேன்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.. ரெஸ்ட் எல்லாம் நேத்தோட முடிஞ்சு போச்சுங்க இன்னைக்கு நான் வேலைக்கு போகணும் அதான் டிபன் ரெடி பண்ணிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க.. என்னது உன்னை சமைக்கவே வேணாம்னு சொல்ற இதுல நீ வேலைக்கு வேற போவியா அப்படின்னு முத்து கேட்க இல்லைங்க இன்னைக்கு முஹுர்த்த  நாள் வேற நிறைய ஆர்டர் வரும் . அப்போ ஒன்னு பண்ணலாம்  நானும் உன் கூட வரேன் உன்னை தனியா விட முடியாது அப்படின்னு சொல்றாரு இப்போ ஸ்ருதி வந்துறாங்க. பரவால்ல ஹஸ்பன்ட்னா ஒய்ஃப் மேல இப்படி அக்கறையா தான் இருக்கணும்னு சொல்றாங்க.

மீனா சொல்றாங்க அப்போ உங்களோட வருமானம் என்னாகுறதுன்னு கேட்க   உடனே முத்து யோசிச்சு  நான் உனக்கு பைக் ஓட்டுற அதுக்கு நீ உன்னால எவ்வளவு  கொடுக்க முடியுமோ குடு அப்படின்னு சொல்லவும் சுருதி சூப்பர் இதுவும் நல்ல ஐடியாவை தான் இருக்கு வேலைக்கு வேலை ஆன மாதிரி ஆச்சு.. இதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிச்சு இருக்காங்க. நாளைக்கு ப்ரோமோல   முத்துவும் மீனாவும் பூ கொடுக்க போறாங்க அதை பார்த்து சிட்டி இவங்கள அடிச்சு தூக்கணும் கை கால் உடைந்து மூணு மாசம் படுத்தா தான் இவங்களுக்கு தெரியும் மேலே கை வச்சாங்க இல்ல அப்படீன்னு சொல்லிட்டு இருக்காரு ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்