சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனா மீது விஜயா காட்டும் அக்கறை .. விஜயாவா இது?.

சிறகடிக்க ஆசை தொடரில் [செப்டம்பர் 19] இன்றைக்கான எபிசோடில் சிட்டியை  பகைத்துக்கொள்ளும்  சத்யா..மீனா மீது விஜயா காட்டும் அக்கறை..

vijaya,meena (3) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [செப்டம்பர் 19] இன்றைக்கான எபிசோடில் சிட்டியை  பகைத்துக்கொள்ளும்  சத்யா..மீனா மீது விஜயா காட்டும் அக்கறை..

சிட்டியை எதிர்க்கும் சத்யா ;

மீனாவோட அம்மா வீட்ல அழுதுட்டு இருக்காங்க.. இப்போ சத்யா வீட்டுக்குள்ள வந்ததும்  ஏம்மா அழுகுறனு  கேட்க எல்லாமே உன்னால தாண்டா.. அந்த சிட்டி கூட சேராதுன்னு சொன்னேனே நீ கேட்டியா இப்ப மீனாவ தள்ளிவிட்டு தலையில் அடிபட்டுருச்சு அப்படின்னு சொல்றாங்க. அக்கா ஏன் அங்க  போனாங்க.. எல்லாம் உன் மேல வச்சிருந்த பாசத்தால தான்.. நீ சிகரெட் குடிக்கிறேன்னு அவ கிட்ட சொன்னேன் அவ எல்லாத்துக்கும் காரணம் அந்த சிட்டி தானே.. அவன பாக்க போனா அப்படின்னு சொல்றாங்க. இப்போ சத்யா நேரா  சிட்டி பாக்க போறாரு.. வா சத்யா உன் மாமா என்ன எப்படி போட்டோ அடுச்சு  இருக்கான் பாரு..  அதுக்கு சத்யா சொல்றாரு இதோட விட்டுட்டு போனாருனு   நினைச்சுக்கோங்க.

என் வீட்ல எவ்வளவோ சொல்லியும் நீ தான் முக்கியம்னு உன் கூட நின்னேன்  ஆனா நீ இப்ப என் அக்காவே அடிச்சிருக்கிற.. வேற ஆளா இருந்திருந்தா நடக்கிறதே வேற அப்படின்னு சொல்றாரு.. உன் அக்கா ரொம்ப பேசினாங்க அப்படின்னு சொல்லவும் அதுக்கு சத்யா சொல்றாரு நீ என் அக்கா கிட்ட மன்னிப்பு கேட்டா தான் நான் இந்த பக்கம் வருவேன் இல்லாட்டி வரமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாரு . இப்போ செக்கப் எல்லாம் முடிஞ்சு முத்து மீனாவ  கூப்பிட்டு ஹாஸ்பிடல்ல இருந்து வராரு..  நான் உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு முத்து கிளம்பிட்டாரு. இந்த டைம்ல  மீனாவோட அம்மா தங்கச்சி சத்யா  மூணு பேரும்  ஹாஸ்பிடல் வராங்க.. மீனாவோட அம்மா அழுதுட்டு மீனா கிட்ட ரொம்ப அடிபட்டுருச்சானு கேக்குறாங்க மீனாவும் இல்லமா சின்ன அடிதான் சொல்லிடறாங்க.

Seetha (3) (1)

மீனா மீது விஜயாவுக்கு வரும் கரிசனம் ;

இப்போ சத்யாவையும் அடிக்கிறாங்க  பாரு எல்லாமே உன்னால் தான் .. மீனாவும்  சரி விடுமா அப்படின்னு சொல்லிட்டு சத்யாவுக்கு அட்வைஸ் பண்றாங்க. சத்யா நீ குடும்பத்தை பார்த்துப்பேன்னு சொல்லிட்டு தான் நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். நான் அப்பவே சொன்னேன் இவன் கூட சேராது நான் கேட்க மாட்டேன் நம்ம உண்மையா உழைச்சி சம்பாதிக்கிற காசு தாண்டா உடம்புல ஒட்டும் இனிமேல் இந்த வேலை உனக்கு வேண்டாம் ..நீ படிச்சு நல்லா சம்பாதிச்சு முன்னேறுற  வழியை பாரு அப்படின்னு குணமா எடுத்து சொல்லிட்டு இருக்காங்க. சத்யாவும்  அழுதுகிட்டே என்னை மன்னிச்சிருக்கா.. நான் இனிமேல் சிட்டிகிட்ட   வேலை பார்க்க மாட்டேன் அவன்கிட்ட நான் சொல்லி திட்டிவிட்டு வந்துட்டேன் அப்படின்னு சொல்றாங்க இத எல்லாத்தையுமே முத்து ஓரமா நின்னு பார்த்துட்டு சந்தோசப்படுகிறார்..

இப்போ முத்து மீனா வீட்டுக்கு வராங்க.. தலையில கட்ட பாத்துட்டு விஜயா என்னடி இது கட்டு போட்டு இருக்கிற அப்படின்னு கேட்க அதுக்கு முத்து சொல்றாரு வண்டில போறப்ப கீழ விழுந்துட்டா. ஏன் நீ பார்த்து போக மாட்டியா ..பேச்சு மட்டும் எப்படி பேசுற கண்ண முன்னாடி வச்சு ஓட்ட மாட்டியா.. சரி சரி ரொம்ப அடிபட்டுருச்சா என்ன அப்படின்னு அக்கறையா கேக்குறாங்க ..இதை பார்த்த முத்து, அண்ணாமலை, மீனாவுக்கு ஆச்சரியமா இருக்கு.. சரி அப்போ ரெண்டு நாளைக்கு நீ சமைக்க மாட்ட நானே சமைச்சிடுறேன் அப்படின்னு சொல்லிட்டு கிச்சனுக்கு  போறாங்க ..  இப்போ முத்து கேக்குறாரு என்னப்பா  அம்மாவா இது..  அதுக்கு அண்ணாமலை சொல்றாரு விஜயாவை இப்போ வரைக்கும் என்னால புரிஞ்சுக்கவே முடியல.. சரி உங்க மேல ஏதாவது கண்ணு பட்டு இருக்கும் நம்ம ஒரு நாளைக்கு எல்லாரும் குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம் அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு..

vithya ,Rohini (1) (1)

சிட்டியை நாடி வரும் ரோகினி ;

இப்போ ரோகிணி சிட்டிய  பாக்க வர்றாங்க.. அவன்  ஜெயில்ல இருந்து வந்துட்டான் மறுபடியும் என்கிட்ட பெரிய அமௌண்டா கேட்கிறான் சிட்டி.. நீங்க ஏதாவது பண்ணுங்க அப்படின்னு சொல்லவும் துக்கு சிட்டி  கேக்குறாரு அப்போ நீங்க ஏதோ தப்பு பண்ணி இருக்கீங்க ..அது என்னன்னு கேட்க அதுக்கு ரோகினி சொல்றாங்க அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க .உடனே சிட்டி சரி உங்ககிட்ட இருந்து எனக்கு ஒரு உதவி வேணும் அப்படின்னு சொல்றாங்க. என்னன்னு கேட்டதுக்கு முத்து உங்க கொழுந்தன் தானே..   ரோகிணி தயங்கிட்டே  அது எப்படி உங்களுக்கு தெரியும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும் சத்யா  சொல்லியிருக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க .இதோட இன்னைக்கு எபிசோடு முடுச்சுருக்காங்க .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 24 01 2025
Donald trump
Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai