மனோஜ்க்காக பணக்கார குடும்பமாக மாறும் சிறகடிக்க ஆசை குடும்பம்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 22] எபிசோடில் மனோஜின் திட்டத்திற்கு ரவியும் முத்துவும்  சம்மதிக்கின்றனர்.

manoj,muthu (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 22] எபிசோடில் மனோஜின் திட்டத்திற்கு ரவியும் முத்துவும்  சம்மதிக்கின்றனர்.

மனோஜின் பிஸ்னஸ் மேன் கனவு ;

மனோஜூம்  ரோகினியும் வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு எங்களுக்கு கல்யாண நாள் வரப்போகுது அப்படின்னு சொல்றாங்க ..இதை கேட்ட முத்து நக்கலா  கேடிகள் ஒப்பந்தம் போட்ட நாள் அப்படின்னு சொல்லுடான்னு சொல்லுறாரு . இப்போ மனோஜ்  இந்த நாளுக்கு நாங்க ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி அரேஞ்ச் பண்றோம் அதுல பாம்பைல இருந்து ஒரு பிசினஸ்மேன் வராரு அவரும் கலந்துக்க போறாரு .அவர் குடுக்குற ஆர்டர் மட்டும் கிடைச்சுட்டா நம்ம பெருசா சம்பாதிக்கலாம் அப்படின்னு சொல்லுறாரு .. மனோஜ்  முத்துவையும் ரவியையும்  உங்ககிட்ட நான் தனியா பேசணும்னு கூட்டிட்டு போறாரு. அதே மாதிரி ரோகிணி மீனாவையும் சுருதியையும் தனியா கூப்பிட்டு போறாங்க. இப்போ மனோஜ் சொல்றாரு வர பிசினஸ்மேன் என்ன மட்டும் இல்லாம கூட இருக்கிறவங்களையும் என்ன பண்றீங்கன்னு  விசாரிப்பாரு அதுக்கு நான் அவங்க கிட்ட வேற விதமா  சொல்லி வைத்திருக்கிறேன் .

muthu (8) (1)

முத்து நீ 50 கார் வச்சு டிராவல்ஸ் பண்றேன்னு சொல்லி இருக்கிறேன்.. ரவி நீ சொந்தமா ரெஸ்டாரன்ட் வச்சிருக்கேன்னு சொல்லி இருக்கிறேன் இத கேட்ட முத்து   டேய் நம்மளை பொய் சொல்ல சொல்றாண்டா அதெல்லாம் முடியாது அப்படின்னு சொல்றாரு. அதுக்கு மனோஜ் சொல்றாரு எனக்கு பெரிய பிசினஸ் மேன்  ஆகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை அதுக்காகத்தான் இவ்வளவு படிச்சேன் அது உங்களுக்கே நல்லா தெரியும் ஒரு அண்ணனா உங்ககிட்ட நான் எதுவுமே கேட்டதில்லை அப்படின்னு சென்டிமென்ட்டா பேசுறாரு ..அதுக்கு முத்து நக்கலா ஆமா நீ கேட்கலாம் மாட்டேன் எடுத்துட்டு ஓடிவ அப்படின்னு சொல்றாரு.. டேய் சீரியஸா பேசுறேன் டா.. இந்த பிசினஸ் கெடச்சா நம்ம ஃபேமிலியே மாறிடும் அப்படின்னு  கெஞ்சவும் வேற வழி இல்லாம ரவியும் முத்துவும் சம்மதிசுராங்க..

அப்போ என்னோட கெட்டப்பு எல்லாம் மாத்தணுமே டா அப்படின்னு முத்து கேட்க அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் டா .அப்போ 50 கார்   ஓனரோட பொண்டாட்டியும் அதே மாதிரி தானடா வரணும் அத ரோகினி பார்த்துப்பா டா அப்படின்னு சொல்ல  அப்போ ரெண்டு பேருமே சேர்ந்து தான் இந்த வேலையை பண்றீங்களா சரி ஏதோ குடும்ப நல்லதுக்குன்னு  சொல்றீங்க ..ஆனா எதாச்சும் பிரச்சனை வந்துச்சு அப்படின்னு முத்து  சொல்லுறாரு .அதுக்கு மனோஜ் நீங்க டிரஸ் பண்ணிட்டு வந்து நின்னா போதும் .. அதோட இன்னைக்கு எபிசோட முடிச்சு இருக்காங்க.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts