சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 3] கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்.
மீனா கிச்சன்ல இருந்து அவங்க அம்மாவுக்கு கால் பண்றாங்க அம்மா வீட்ல பங்க்ஷன் இருக்குது மா வந்துருங்க அப்படின்னு சொல்றாங்க ..அதுக்கு அவங்க அம்மா சொல்றாங்க மாப்ள சொன்னாருடி அப்படின்னு சொல்லும் போதே முத்து வந்துட்டாரு நான் பேசுறேன்னு முத்து பேசறாரு அத்தை போன்ல சொல்றேன்னு எதுவும் நினைச்சுக்காதீங்க மறக்காம வந்துருங்க ன்னு சொல்றாங்க.
சரி மாப்ள நாங்க வந்துறோம் அப்படின்னு சொல்லுறாங்க .. இப்ப முத்து பாட்டியை கூப்பிடறதுக்கு போறாங்க பாட்டியை கூப்பிட்டு வரும்போது முத்துவோட முகத்தை பார்த்துட்டு பாட்டி கேக்குறாங்க ஏன்டா நான் ஊருக்கு வந்தது உனக்கு பிடிக்கலையா அப்படின்னு கேக்குறாங்க.. ஏன் பாட்டி இப்படி சொல்றீங்க.. அதுக்கு பாட்டி சொல்றாங்க அப்புறம் ஏன் மூஞ்சிய இப்படி சீக்கு வந்த மாதிரி வச்சிருக்கிற.
அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி அப்படின்னு முத்து சொல்லுறாரு இப்போ சிக்னல் வந்தது. அங்கே ஒரு பொண்ணு கழுத்து நிறைய நகை போட்டுட்டு இருக்கிறா. அதை பார்த்து பாட்டி ஏண்டா இந்த பொண்ணு இவ்வளவு நகை போட்டு இருக்கிறா அப்படின்னு கேக்குறாங்க .. அதுக்கு முத்து சொல்றாரு எல்லாம் ஒரு பெருமைக்கு தான் பாட்டி.. இப்ப பாட்டி சொல்றாங்க ஏன் இது கவரிங் நகை கூட இருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க உடனே முத்து யோசிக்கிறாரு..
இப்ப பாட்டி வீட்டுக்கு வந்ததும் மீனா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வராங்க அதை பார்த்த விஜயா இங்க குடு அப்படின்னு அந்த ஆரத்தி தட்ட வாங்கி ஸ்ருதிகிட்டயும் ரோகினிகிட்டயும் கொடுத்துடுறாங்க நீங்க ரெண்டு பேரும் போய் பாட்டிக்கு ஆரத்தி எடுங்க அப்படின்னு சொல்றாங்க. இத பார்த்த பாட்டி மீனா நீ வந்து எடுத்தால்தான் எனக்கு சந்தோசம் என்று சொல்லிடறாங்க. இப்ப மூணு பேருமே பாட்டிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.
பாட்டி உள்ள வந்து பார்த்ததும் டெக்கரேஷன் எல்லாம் பார்த்து ரொம்ப சந்தோச படுறாங்க.. விஜயா சொல்றாங்க அத்தை எனக்கு கூட இந்த மாதிரி எல்லாம் பண்ணல அப்படின்னு சொல்றாங்க.. இப்போ ஸ்ருதி வந்து பாட்டியை கட்டிப்பிடிகிறாங்க . பாட்டி உங்க பியூட்டி ரகசியம் என்னதுன்னு கேக்குறாங்க. அதுக்கு பாட்டி சொல்றாங்க நான் தோட்டத்துல நிறைய வேலை பார்ப்பேன் அதுதா கூட இருக்கலாம் என்று சொல்றாங்க .
உடனே அதுக்கு சுருதி சொல்றாங்க அப்ப விவசாயம் பண்ணுனா அழகா ஆயிரலாமானு கேக்குறாங்க அப்படின்னு இல்ல மனசும் எண்ணமும் ஒரே மாதிரி இருக்கணும் அப்படின்னு பாட்டி சொல்றாங்க.. இப்ப அண்ணாமலை சொல்றாரு உங்களுக்கு இன்னும் நிறைய இருக்குது நிறைய யோசனை எல்லாம் பசங்க பண்ணி வச்சிருக்காங்க அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கு பாட்டி எனக்கு தெரியும் என் பேர பசங்க நல்லா பண்ணுவாங்கன்னு ஆனா எனக்கு புடிச்ச மாதிரி யாரு பரிசு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு நான் ஒரு பரிசு கொடுப்பேன் அப்படின்னு சொல்றாங்க. அது என்னன்னு எல்லாருமே கேக்குறாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்றாங்க .இப்போ விஜயா கேக்குறாங்க அப்படி என்னத்த குடுக்க போறீங்க .
அதுக்கு பாட்டு இங்க வா அப்படின்னு சொல்லிட்டு விஜயா கிட்ட வந்ததும் நாளைக்கு நான் கொடுக்கும்போது தெரியும் அப்ப பாத்துக்கோ அப்படின்னு சொல்லிடுறாங்க .. இப்போ மனோஜ் ரோகிணிகிட்ட அப்படி பாட்டி என்னதான் கிப்ட் கொடுக்க போறாங்க அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு ரோகிணி சொல்றாங்க அடையாறில் ரெண்டு பிளாட் கொடுக்கப் போறாங்களாம் கிண்டலா சொல்றாங்க. உடனே அத சீரியஸா எடுத்துக்கிட்டு அப்படியானு மனோஜ் அதிர்ச்சியா கேக்குறாங்க.
மாம்ஸ் எனக்கு என்ன தெரியும் உன்னோட பாட்டி பத்தி உனக்கே தெரியல எனக்கு எப்படி தெரியும் என்று ரோகினி சொல்றாங்க.. இப்போ முத்து மீனா கிட்ட நான் வெளியில போற மீனா நான் இங்க இருந்தா நகையை பத்தி கேட்டுருவேன் அதனால நான் வெளியில போயிட்டு பங்க்ஷன் ஆரம்பிக்கும் போது வர்றேன்னு சொல்றாங்க.
உடனே மீனாவும் சரிங்க என்று சொல்லிடறாங்க இப்போ பாட்டி பார்த்துட்டு எங்கடா போற நான் வந்திருந்த அன்னைக்கும் நீ வேலைக்கு போவியா இன்னைக்காவது வீட்டில் இருக்கலாம் இல்லன்னு சொல்றாங்க. இல்ல பாட்டி கொஞ்சம் வேலை இருக்கு அப்படின்னு சொல்றாரு.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் சொல்லிட்டு கிளம்பிடுகிறார். இதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது..
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…