சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!
சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 1] கதைக்களத்தை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீனா முத்து பாராட்டாத விஷயத்தை பூக்கடை அக்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் நாங்க தான் சொன்னோம் இல்ல எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான். மீனா சொல்றாங்க இல்ல அவர் அப்படி இல்ல ஏதோ வேலை அவசரத்துல மறந்திருப்பாரு அப்படின்னு சொல்றாங்க. சரி இப்ப நீ போன் பண்ணி கேளு அப்படின்னு அந்த அக்கா சொல்றாங்க. மீனாவும் கால் பண்றாங்க முத்து போன் எடுத்து சொல்லு மின்னானு சொல்றாங்க. காலையில சாப்பாடு எப்படி இருந்துச்சுன்னு கேக்குறாங்க.. உடனே முத்து நான் அவசரமா போயிட்டு இருக்கேன் மீனா என்னை கடுப்பேத்தாத அப்படின்னு சொல்லிட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.
இப்ப மீனா கோபத்தோட பெட் கட்டுன அந்த அம்பது ரூபா எடுத்து கொடுக்குறாங்க. விஜயா பார்வதி கிட்ட பொலம்பிட்டு இருக்கிறாங்க. அந்த வீட்ல இருக்கவே எனக்கு புடிக்கல நான் டான்ஸ் கிளாஸ்ல தான் ஏதாவது சாதிக்கணும் அப்பதான் எனக்கு மரியாதை கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. பார்வதி சொல்லுறாங்க நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன் விஜயா அப்படின்னு சொல்றாங்க .முதல் மாசத்துல நீ பீஸ் வாங்க வேண்டாம் கம்மி விலையில் அவர்களுக்கு பரதநாட்டிய டிரஸ் கொடுத்து அதிகமா பணம் வாங்கலாம் இத கேட்ட விஜயா நல்ல ஐடியாவா இருக்கு பார்வதி வா இப்பவே துணி கடைக்கு போலாம்னு கிளம்புறாங்க. அதே கடையில தான் ரோகிணி க்ரிஷுக்கு கோட் சூட் எடுத்துட்டு இருகாங்க
. வீடியோ கால்ல கிரிஸ்க்கு காட்டுறாங்க இது புடிச்சிருக்கானு கிரிஷ் சொல்லுறான் உங்களுக்கு பிடிச்சதை எடுத்துட்டு வாங்கம்மா அப்படின்னு. பார்வதியும் விஜயாவும் டான்ஸ் கிளாஸ்க்கு டிரஸ் செலக்ட் பண்ணிட்டு பில் கவுண்டருக்கு வராங்க ரோகிணியே அதே டைம்ல இங்கே வராங்க என்ன ரோகினி அப்படின்னு விஜயா கேக்குறாங்க. சின்னதா பர்சேஸ் பண்ணலாம் என்று வந்தேன் ஆன்ட்டி அப்படின்னு ரோகினி சொல்றாங்க. நீங்க என்ன பண்றிங்க அப்படின்னு கேட்டதுக்கு விஜயா சொல்றாங்க புதுசா ஆஃபர் போட்டு இருக்கோம் ரோகிணி டான்ஸ் கிளாஸ்சுக்கு துணி எடுக்கலாம் என்று வந்தோம் . இப்போ ரோகினி செலக்ட் பண்ண ட்ரெஸ்ஸ கொண்டு வந்து அந்த கடைக்காரர் கொடுக்குறாரு.
மேடம் உங்க பையனுக்கு செலக்ட் பண்ண டிரஸ கவுண்டர்ல குடுத்துடறேன் அப்படின்னு சொல்றாங்க இதை கேட்டா விஜயா என்ன பையனா அவ என் மருமக இன்னும் அவளுக்கு பையன் எல்லாம் இல்ல அப்படின்னு சொல்றாங்க என்ன ரோகினி இந்தாளு பையனு சொல்கிறார் . இல்ல ஆன்ட்டி என்னோட க்ளைண்டோட பையனுக்கு பர்த்டே பங்க்ஷன் இருக்குது அதுதான் அவரு என்னோட பையன் தப்பா புரிஞ்சுகிட்டாரு அப்படின்னு சொல்லி சமாளித்து விடுகிறார். உங்களுக்கும் சேர்த்து நானே பண்ணிறேன் ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க. இப்ப பார்வதி 6000 ரூபா வருமா விஜயாவே கொடுத்துக்குவா. அதான் ரோகினி கட்டறேன்னு சொல்ற கட்டிருவா அப்படின்னு விஜயா சொல்றாங்க..
இப்ப விஜயா அந்த டிரஸ்ஸ பாத்துட்டு என்ன ரோகினி பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிற அப்படின்னு இல்ல ஆன்ட்டி இதுக்கும் அவங்களே பணம் கொடுத்துடுவாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க.. இப்ப முத்து மீனாவுக்கு சேலை வாங்கிட்டு வராரு வரையிலே மீனா மீனா என்று கூப்பிடுவாரு உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்து இருக்கிறேன் அப்படின்னு சொல்றாரு, மீனா முத்து சொல்ற எல்லாத்துக்குமே சலிப்பா பதில் சொல்றாங்க. முத்துவும் அந்த புடவையை காட்டுறாரு நல்லா இருக்குதான்னு கேக்குறாரு அதுக்கும் சரியான பதில் சொல்லல.. உங்களால் எனக்கு ரூ.50 நஷ்டம் ஆயிடுச்சு அப்படின்னு நடந்தது எல்லாத்தையும் சொல்ல ஆரம்பிக்கிறாங்க.
நீ ஏன் மீனா பெட்லாம் கட்டுற நான் கடைக்கு உனக்கு புடவை எடுக்கும்போது அந்த கடைக்காரன் சொன்னா பொம்பளைங்களுக்கு எடுத்து கொடுத்தா ஏதாவது ஒரு குறை சொல்லிகிட்டே தான் இருப்பாங்க அப்படின்னு சொன்னான் நான் அவன் கூட பெட்லாம் கட்டளையே நீ ஏன் அந்த மாதிரி பண்ண அப்படின்னு கேக்குறாரு. இதுக்கு மேல ஒண்ணுமே சொல்லாம ரூம்குள்ள போய் கதவை அடைச்சுக்கிறாங்க .முத்துவும் சாரி மீனா சாரி மீனா இப்ப நீ வெளில வரியா நான் போவா வெளில அப்படின்னு கேக்குறாங்க. மீனா உடனே அந்த புது புடவையை கட்டிட்டு வெளிய வராங்க. மீனா இதுல நீ ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொல்றாங்க. மீனாவும் வாங்க செல்பி எடுக்கலாம் என்று செல்பி எடுத்து சந்தோஷமா இருக்காங்க இதைவிட இன்றைக்கு எபிசோடு முடிந்தது.
நாளைக்கான ப்ரோமோல மீனாவும் முத்துவும் க்ரிஷ் ஓட வீட்ல இருக்கிறாங்க இந்த டைம்ல கூட உங்க பொண்ணு வரலையா அப்படின்னு கேக்குறாங்க. இந்த வயசுல யாருமே இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்குனு எனக்கு நல்லா தெரியும் அப்படின்னு முத்து சொல்லிட்டு இருக்காரு. உடனே ரோகினி ஓட அம்மா இவன் என் பொண்ணோட பையன் தான்ப்பா அப்படின்னு சொல்றாங்க. இதைக் கேட்டுக் கொண்டே ரோகினி அதிர்ச்சியா மறஞ்சு பாக்குறாங்க. நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..