சிறகடிக்க ஆசை சீரியல்.. மனோஜை வெளுத்து வாங்கிய குடும்பம்.. இதிலிருந்து தப்பிப்பாரா?

siragadikka asai 12

சிறகடிக்க ஆசை– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 12] எபிசோடை இங்கே காணலாம்.

செல்வமும் முத்துவும்  பிரிட்ஜ் வாங்குறதுக்காக கடைக்கு போறாங்க ..அப்போ ரெண்டு பேருமே கடையை பார்த்துட்டு இவ்வளவு பொருள் இருக்கா அதுவும் கம்மி ரேட்டில் அப்படின்னு ஆச்சரியப்படுறாங்க.. அதுல செல்வம் ஒரு பிரிட்ஜ் பாத்துட்டு முத்து இது உன்னோட அண்ணன் கடையில பாத்துட்டு வாங்க முடியாம போச்சுல்ல அது மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றாரு.

முத்துவும்  ஆமாடா ..அப்ப இதையே வாங்கிடலாம் அப்படின்னு புக் பண்ணிட்டு காசு கொடுத்துடறாங்க.. இப்போ போலீஸ் வராங்க வந்து அங்க இருக்குற எல்லாருமே அரெஸ்ட் பண்ணிடறாங்க. அதுல செல்வத்தையும் முத்துவையும்  கூடவே அரெஸ்ட் பண்ணிடறாங்க . இப்ப ஸ்டேஷன்ல இது போல ஏமாந்து போன ஓனர்ஸ்லாம் அங்க இருக்காங்க .. அவங்க அவங்க பொருளை எடுத்துட்டு போலீசுக்கு நன்றி சொல்லிட்டு போறாங்க.

manoj (1)

இப்ப மனோஜ்  வராரு அவர் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார்.. இந்த குரலைக் கேட்ட முத்து அவர அப்படியே சைலண்டா வீடியோ எடுக்குறாரு.. மனோஜ் காணாமல் போன பொருளு எல்லாத்தையுமே சொல்கிறார். போலீஸ் சொல்றாங்க இதை மட்டும் கரெக்டா சொல்லு ஆனா இவ்வளவு முட்டாளா இருக்கிறியே அப்படின்னு திட்டுறாங்க.  உன் பொருளை கண்டு பிடுச்சுட்டு கோபுட்டுடறோம்னு சொல்லி மனோஜை அனுப்பிவிடுறாங்க  .

முத்துவையும்  செல்வத்தையும் விசாரிச்சுட்டு அனுப்பிடறாங்க.. முத்து எதையோ சாதிச்சிட்டு வந்தது மாதிரி வீட்டுக்குள்ள போயி கதவை சாத்திராரு ..அண்ணாமலை கேக்குறாரு ஏன்டா கதவை லாக் பண்ற ..இருப்பா வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிடுப்பா அப்படின்னு சொல்றாரு. எல்லாரும் வராங்க ..இப்ப மனோஜ் போலீஸ் கிட்ட பேசின  வீடியோவை போட்டு காட்டுறாரு . விடீயோவை  பாத்துட்டு எல்லாருமே ஷாக் ஆகி நிக்கிறாங்க..

VIJAYA (2)

இப்போ மீனா ரோகிணியை பார்த்து கேக்குறாங்க எப்ப பார்த்தாலும் உங்க வீட்டுக்காரர மட்டம் தட்டி பேசுறாரு அப்படின்னு சொல்றீங்களே  இப்படி எல்லாம் பண்ணுனா எப்படி பேசாம இருப்பாங்க அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு ரோகிணி கூனி குறுகி நிக்கிறாங்க.. அந்த அந்த கோபத்தோட மனோஜ் கிட்ட ஏ மனோஜ் என்கிட்ட சொல்லல அப்படின்னு கேக்குறாங்க. மனோஜ்  சொல்லுறாரு ..நீ திட்டுவேன்னு தான் ரோகிணி அப்படின்னு இழுக்கிறாரு..

அண்ணாமலை கேக்குறாரு ஏண்டா இதை நீ சொல்லல பிசினஸில் இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான் ஆனா நீ ஏன் என்கிட்ட பொய் சொன்ன அப்படின்னு கேக்குறாரு.. இப்போ சுருதி சொல்றாங்க 4 லட்சம் ஏமாந்தீங்க அப்படின்னா அப்புறம் வீட்ல கொண்டுவந்து நாலு லட்சம் எப்படி கொடுத்தீங்க அப்படின்னு கேக்குறாங்க.. இப்ப முத்து என்ட்ரி ஆகுறாரு பல குரல் கரெக்டா கேட்ட இதத்தான் நானும் கேட்கணும்னு நினைச்சேன் அப்படின்னு சொல்லிட்டு மனோஜ நோக்கி போறாரு.

எப்படின்னு சொல்லுடா எனக்கு இப்ப தெரிஞ்சாகணும் ஆல்ரெடி வீட்டுல ஒரு பிரச்சனை போயிட்டு இருக்கு நான் எத பத்தி சொல்றேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கா நீயா சொல்லிரு அப்படின்னு கேக்குறாரு. இப்ப வேகமா விஜயா வந்து மனோஜ அடி அடின்னு அடிக்கிறாங்க ஏண்டா ஏமாந்தது இல்லாம இப்படி பொய் சொல்லி தொலைச்ச அப்படின்னு அடிக்கிறாங்க. இத பாத்து ரோகிணி விடுங்க ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க..

Rogini manoj

யாரும் எதுவும் சொல்லாதீங்க அப்படின்னு மறுபடியும் அடிச்சுட்டு அந்த நாலு லட்சம் எப்படி வந்துச்சு யார்கிட்டயாச்சும்  கடன் வாங்குனியா அப்படின்னு க்ளூ எடுத்து கொடுக்குறாங்க இத நல்லா புரிஞ்சுகிட்டு மனோஜ் ஆமா என் பிரண்டு கிட்ட வாங்கினேன் அப்படின்னு சொல்றாரு. அண்ணாமலை கேக்குறாரு எந்த பிரெண்டு அதுக்கு பார்க்ல என்கூட இருந்தாருல அவருதான்பா அப்படின்னு சொல்லிடுராறு .

எப்படியோ விஜயா மறுபடியும் மனோஜ் காப்பாற்றி விடுகிறார்கள். ரோகினியும் இத சாதாரணமா எடுத்துக்கிட்டு விடுங்க ஆன்ட்டி இவரு யாரையும் ஏமாத்தல ஏமாற தானே செஞ்சாரு அப்படின்னு சொல்றாங்க. இப்போ அதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு பாக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi