அஜித்தை வச்சு படம் இயக்குவீங்களா? தெறித்து ஓடிய இயக்குனர் சிறுத்தை சிவா!

ajith and SiruthaiSiva

இயக்குனர் சிறுத்த சிவா நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் அவர் இயக்கிய விவேகம் படத்தை தவிர மீதமுள்ள எல்லா படங்களும் பெரிய அளவில் அஜித்திற்கு வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம். விவேகம் திரைப்படம் மட்டும் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை.

இவர்கள் இருவரும் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அடுத்ததாக இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்னும் சில காரணங்களால் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் செய்யாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அதில் இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் பத்திரிகையாளர் அஜித் படம் மீண்டும் இயக்குவீர்களா என்று கேட்ட கேள்விக்கு சிறுத்தை சிவா கொடுத்த ஒரு ரியாக்சன் மிகவும் வைரலாகி வருகிறது. அவருடைய ரியாக்சனை வைத்து நெட்டிசன்கள் மற்றும் சில நடிகர்களின் ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.

என்னை விட கார்த்தி தான் சிறந்தவன்! மேடையில் மனம் திறந்து தம்பியை பாராட்டிய சூர்யா!

ஜப்பான் விழாவில் பேசி முடித்த பிறகு அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் சார் அஜித் சாருடன் இணைந்து படம் செய்வீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். அந்த கேள்வியை கேட்டுமுடித்த பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா கையை எடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார். இதனை வைத்து தான் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ஆனால், உண்மையில் பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்வி சிறுத்தை சிவாவுக்கு கேட்டதா அதற்கு தான் அந்த ரியாக்சன் அவர் கொடுத்தாரா இல்லையா என்பது அவரே விளக்கம் அளித்தால் தான் தெரிய வரும். மேலும், இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்