அரசியலுக்கு வருவாரா தளபதி விஜய்..? தாயார் சொன்ன அதிரடி பதில்.!
பாடகியும், விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் ” அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது”.
இதையும் படியுங்களேன்- பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீ லாயக்கில்லை… தகுதியே இல்லை… மைனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்.!
இது பற்றி விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அவருடைய விருப்பம். எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்” என தளபதி தயார் ஷோபா சந்திரசேகர் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.