மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு'சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் உள்ளது.

Meiyazhagan

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தற்பொழுது படத்திற்கு தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் உள்ளது. அப்படியேனால், படம் போர் அடிக்காமல் போக வேண்டுமே. ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு பீல் குட் நிறைந்த குடும்ப படமாக தெரிகிது.

இவ்வளவு இருக்கிறது என்றால், உண்மைலயே படத்தில் ஏதோ இருக்கிறது மட்டும் தெளிவாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். நேற்றைய தினம் இப்படத்தின் டிரைலர் வெளியானது. ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ள இந்த படத்தின் டிரைலர் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. இப்படம் 96 படத்தை போன்ற வேறொரு தாக்கத்தை நம்முள் கடத்தும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில், ராஜ்கிரண், சரண் சக்தி, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேக்கா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணியன், கயல் சுப்ரமணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்களது 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் கீழ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவும், ஆர் கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் மற்றும் பிரபுதேவாவின் பேட்ட ராப் ஆகிய படங்களுடன் திரையரங்கில் ஒன்றாக மோதுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்