நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கிய இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதல் செட்யூல் நிறைவு பெற்று சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.
மீண்டும் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது அஜித் குமார் வட்டாரங்களின் படி, உறுதியாகியுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல தயாரிக்கும் நிறுவனமான ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில், எல்ரெட் குமார் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், சில தினங்களுக்கு முன், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே 63’ படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் வெளியான பிறகு அவருடைய 63-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஆதிக் அவரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ள தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…
இதற்கிடையில், அஜித்தின் 64-வது திரைபடம் குறித்தும் ஒரு வதந்தி தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், அஜித்தின் 64-வது திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளாராம். ஆம், இயக்குனர் வெற்றிமாறன் அஜித் ஒரு வரியை கூறியுள்ளார் என்றும், இந்த படத்தை விடுதலை எல்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக அஜித்தின் 62 வது படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய தாமதம் ஆகும் என்பதால், ஏகே 63 தயாரிக்கும் முயற்சியை தெலுங்கு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இதனால் விட்டதை பிடிக்கும் முயற்சியாக, 64 படத்தை வெற்றிமாறன் இயக்க எல்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சினிமா செய்திகளை வழங்கும் பிரபல யூடியூப் வலைப்பேச்சு பகிர்ந்துள்ளது.
AK 63 படத்தை கைவிட்ட ஆதிக்? மொத்தமும் தெலுங்கு பக்கம் சென்ற சம்பவம்.!
ஆனால், இந்த தகவல் வதந்தியாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘வாடிவாசல்’ திரைப்படத்தையும் ‘வடசென்னை 2’ ஆகிய படங்களை இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் வெற்றிமாறன் வாடிவாசல் செல்வதற்கு முன், அமீர் – ஞானவேல் விவகாரம் ஓய்ந்தபாடில்லை. அமீர் வாடிவாசலில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறன் சாமானிய கதைக்களத்தை முன் வைத்து தான் படம் எபடுப்பார். அத்தகைய கதைக்களத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்வாரா? என்றும் கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை எல்லாம் சரியாக நடந்தால் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாக உருமாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…