யாராவது இப்படி அசிங்கமா பேச சொல்லுவாங்களா சதீஷ்.? பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா.!

Default Image

நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sathish And Dharsha Gupta And Sunny Leone
Sathish And Dharsha Gupta And Sunny Leone [Image Source: Twitter }

இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இயக்குனர் நவீன்,பாடகர் ஸ்ரீனிவாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

Sathish
Sathish [Image Source: Twitter }

இதற்க்கு நேற்று நடிகர் சதீஷ் ”அது எதார்த்தமாக தனக்கும் தர்ஷா குப்தாவுக்கும் நடந்த உரையாடலே, தவிர பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று தான் கூறவில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த உடையையும் உடுத்துவது அவர்கள் சுதந்திரம்”என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட வசூலை 1 வாரத்தில் முறியடித்த ‘லவ் டுடே’.!

Dharsha Gupta Blue Dress
Dharsha Gupta Blue Dress [Image Source: Twitter]

அதனை பார்த்த தர்ஷா குப்தா டுவிட்டரில் மறுப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் “சதீஷ் என் மீதே இதை திருப்ப விடுவது சரியா? நான்தான் உங்களை மேடையில் இப்படி பேச சொன்னேனா? இது மிகவும் விசித்திரமாக உள்ளது.

யாராவது என்ன பற்றி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவாங்களா? எனக்கும் நீங்கள் பேசியது அவ்ளோ வருத்தமாகத்தான இருந்தது. ஆனால் அதை நான் பெரிதாக காட்டி கொள்ளவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, சரியாக இல்லை” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்