முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
குறிப்பாக நோய் ஏற்பட்ட பிறகு கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்தும் கூட விலகினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. சமீபகாலமாகவும் பெரிய அளவில் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை தற்போது அவர் ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்த வெப் தொடரை ராஜ் டிகே, சிட் ராய் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கி வருகிறார்கள். ஆண்ட்ரே நெமெக், ஜெஃப் பிங்க்னர், ஜோஷ் ஆப்பிள்பாம், ஸ்காட் ரோசன்பெர்க் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த வெப் தொடரில் அதிரடியான சண்டை காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
“ப்ளூ ஸ்டார்” பிளாக் பஸ்டர் வெற்றி! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
ஆனால் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதால் அவரால் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க முடியுமா என்ற குழப்பமும் படக்குழுவுக்கு இருந்ததாம். அந்த தகவல் தெரிந்தவுடன் சமந்தா அதெல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை நான் டூப் போடாமலே சண்டை காட்சிகள் நடிக்கிறேன் என உறுதியாக கூறி சண்டை காட்சிகளும் நடித்தாராம்.
பிறகு சண்டைக்காட்சியின் போது ஒரு முறை மயக்கம் அடைந்து விட்டாராம். பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காலத்தில் பல நடிகைகளும் சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் டூப் போட்டு வரும் நிலையில் சமந்தா தனக்கு நோய் இருப்பது தெரிந்தும் சண்டைக்காட்சியில் நடித்துள்ளார் என்ற தகவலை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…