புஷ்பா 2 முதல் நாளில் இவ்வளவு கோடி வசூல் செய்யுமா?
டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் முதல் நாளில் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 5-ஆம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்க முக்கிய காரணமே முதல் பாகம் கொடுத்த வெற்றி தான். முதல் பாகம் உலகம் முழுவதும் 360 கோடி வரை வசூல் செய்திருந்தது. முதல் பாகம் அந்த அளவுக்கு வெற்றியை பெற்ற காரணத்தால் இரண்டாவது பாகம் அதைவிட பெரிய அளவில் வெற்றியை பெறவேண்டும் என திட்டமிட்டு 400 கோடி பட்ஜெட்டில் படத்தை படக்குழு எடுத்துள்ளது.
பட்ஜெட்டிற்கு தகுந்தது போல படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், பாக்ஸ்ஆபிஸை கணிக்குக்கும் ரமேஷ் பாலா புஷ்பா 2 முதல் நாள் வசூலை கணித்துள்ளார்.
அதன்படி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புஷ்பா 2 இந்தியா முழுவதும் முதல் நாளுக்கான முன்பதிவுகளில் ரூ.50 கோடியை நெருங்கியுள்ளது. நாளை இன்னுமே அதிகரிக்கும். இப்படம் கேரளாவில் ரூ 7-10 மற்றும் தமிழ்நாட்டில் ரூ 10-15 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளது.
தெலுங்கில் மட்டும் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளது. புஷ்பா 2 இன் காலை காட்சிகள் கேரளா, மற்றும் மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படம் ரூ.250-275 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.