ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா லியோ?

leo vijay Jailer rajini

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. படத்தை பார்த்த அனிருத்தும் படம் பிளாக் பஸ்டர் ஆகும் என கூறியிருந்தார்.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை பார்க்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், படம் முதல் நாளிலே வசூலில் பல சாதனைகளை முறியடிக்கவும், படைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

லியோ திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வசூலில் தமிழ் சினிமாவை மிரள வைத்தது என்றே கூறலாம். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 50 கோடிகளுக்கு மேல் மற்றும் உலக முழுவதும் 90 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல கர்நாடகாவில் 10.80 கோடி வரை வசூல் செய்திருந்தது.

ராக்கி பாயை அலற விடப்போகும் லியோ தாஸ்! கேரளாவில் முரட்டு சம்பவம் லோடிங்!

இதனையடுத்து, லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தான் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். ஏனென்றால், விஜயின் சினிமா கேரியரில் இவ்வளவு எதிர்பார்ப்புடன் ஒரு திரைப்படம் வெளியாகவில்லை.

அந்த அளவிற்கு லியோ படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள காரணத்தால் ‘லியோ’ படம் கண்டிப்பாக 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிப்பது சற்று கஷ்டம் தான் என தெரிகிறது. ஏனென்றால், ‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் 10 கோடிகளுக்கு மேல் கர்நாடகாவில் வசூல் செய்திருந்தது.

Jawan: சாதனை மைல் கல்லில் ஷாருக்கான்! ஜெயிலர் சாதனையை முறியடித்த ‘ஜவான்’ திரைப்படம்!

ஆனால், லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் கர்நாடகாவில் 7 கோடி மட்டுமே வசூல் செய்யும் என சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளனர். எனவே, லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்