என்னது ‘கபாலி’ 1000 கோடி வசூலா? தயாரிப்பாளர் தாணு கூறிய தகவல்!
தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கும் படம் என்றால் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 2.0 படம் தான். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 800 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த படியாகவும் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் தான் இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் உலக முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக பொன்னியின் செல்வன் 500, விக்ரம் 450 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைக்கும் என கோலிவுட் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது.
இதற்கிடையில், லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ரஜினி ரசிகர்கள் இதற்கு முன்பு கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கபாலி படத்தின் வசூல் பற்றி பேசிய வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த கபாலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தெரிவித்துள்ளது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர் ‘கபாலி திரைப்படத்தின் உண்மையான கணக்கு என்று எடுத்துப்பார்த்தால் கண்டிப்பாக 1000 கோடி வரும். அந்த அளவிற்கு கபாலி படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது. வெளிநாடுகளில் இருந்தும் மட்டும் எனக்கு படத்திற்காக 20 கோடி வரை வந்தது. இந்த அளவிற்கு படம் வெற்றிபெறும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை எனவும்” கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.