மீண்டும் மீண்டுமா? விடாமுயற்சி அப்டேட்டால் கடுப்பான அஜித் ரசிகர்கள்!!
![Vidamuyarchi Ajith](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/08/Vidamuyarchi-Ajith.webp)
சென்னை : விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவிப்பதற்கு முன்னதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை மட்டும் பதிவு செய்வார். அந்த நேரத்தில் படத்தை பற்றிய அப்டேட் எதாவது வெளியாகிவிடும். அப்படி தான் ஆக 20 மாலை 4.33 என்று மணியை குறிப்பிட்டு இருந்தார்.
இதில் என்ன அப்டேட் வெளியாகப்போகிறது? ஒரு வேளை படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது ஒன்று ஆனால் அவர்களுக்கு கிடைத்தது வேறொன்று என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில், வழக்கம் போல படத்தில் நடிக்கும் பிரபலங்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் “கொஞ்சம் ரோட்ட விட்டு தள்ளி நிக்க வைங்க டா எனவும்”, ஐயோ மீண்டும்..மீண்டுமா? எனவும் தயவு செய்து இனிமே அப்டேட்டே வேண்டாம் ரிலீஸ் தேதியை மட்டும் சொல்லுங்கள் என குமுறி வருகிறார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
December 22, 2024![DGP Shankar Jiwal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/DGP-Shankar-Jiwal.webp)
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
December 22, 2024![India Women vs West Indies Women](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/India-Women-vs-West-Indies-Women-1.webp)
ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!
December 22, 2024![viduthalai part 2](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/viduthalai-part-2.webp)