ஒரு வாரத்தில் இதனை கோடி வசூலா..? இந்தி சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘பதான்’.!
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதான் வசூல்
ஷாருக்கான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. வசூல் ரீதியாகவும், சரி விமர்சன ரீதியாகவும் சரி படத்தை பார்த்த பலரும் படம் தாறுமாறு இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
#Pathaan continues to win hearts, keep the love coming ❤️
Book your tickets now! https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBjCelebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/ELL6fAAxLH
— Yash Raj Films (@yrf) February 1, 2023
இந்த நிலையில், ‘பதான்’ திரைப்படம் வெளியான 1 வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் இந்தியாவில் 395 கோடியும், வெளிநாடுகளில் 330 கோடி என மொத்தமாக உலகம் முழுவதும் 634 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தி சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த பதான்
It’s official #Pathaan 1st week worldwide gross = ₹634Cr!
Highest week one gross in history of #Hindi cinema! pic.twitter.com/VJJVxw6Ryw— Sreedhar Pillai (@sri50) February 1, 2023
பதான் திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 634 கோடி வசூல் செய்துள்ளது என்பது இந்தி சினிமா துறையில் புதிய சாதனை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்பு இந்தியில் வெளியான எந்த திரைப்படமும் 1 வாரத்தில் 600 கோடி வசூலை கடந்தது இல்லை. எனவே பதான் திரைப்படம் 634 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.
பதான்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பதான்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா, விஷால்-சேகர் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.