இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், முதல் பாகம் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் அந்த சமயம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா , ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா , மனோரமா , கவுண்டமணி , செந்தில் , நெடுமுடி வேணு , கஸ்தூரி , நிழல்கள் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
ஒரு ஓய்வுபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் இந்தியாவில் ஊழலுக்கு எதிராக செயல்படுவதை மையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தில் சேனாதி பதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் பல விருதுகளையும் வென்றார். குறிப்பாக, 1997 – ஆம் ஆண்டுக்கான தேசிய விருதில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அதைப்போல, தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
1997-ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளிலும் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இதுமட்டுமின்றி, இந்தியன் படத்தை ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் தேர்வாகவில்லை.இருப்பினும், கமல்ஹாசனுக்கு படத்தில் நடித்ததற்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது.
முதல் பாகத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு இவ்வளவு விருதுகள் கிடைத்தது போல, இரண்டாவது பாகத்திற்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்தியன் 2 படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இருக்கும் நிலையில், டிரைலரில் பல கெட்டப்கள் கமல்ஹாசன் போட்டிருந்தது தெரிந்தது.
எனவே, படம் எப்படி இருக்கப்போகிறது? படத்திற்காக கமல்ஹாசன் என்னென்ன விருதுகள் எல்லாம் வாங்கப்போகிறார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…