தொடருமா நட்பு? வீட்டிற்குள் சீரியல் தோழிகள்? பிக் பாஸ் போட்ட பக்கா திட்டம்!!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பவித்ரா ஜனனி, தர்ஷிகா இருவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் எந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கான நாள் நெருங்கிய காரணத்தாலே பல பிரபலங்களுடைய பெயர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக, தகவல்களாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் குறிப்பாக, “தென்றல் வந்து என்னைத் தொடும்” சீரியலில் நடித்த பிரபலங்கள் இரண்டுபேர் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவர்கள் யாரென்றால் பவித்ரா ஜனனி, தர்ஷிகா இருவரும் தான். இருவரும் இந்த சீரியலில் நடித்ததிலிருந்து நெருங்கிய தோழிகளாகவே மாறிவிட்டார்கள் என்றே சொல்லலாம். இருவருக்கும் இடையே நல்ல பழக்க வழக்கம் இருப்பதால் இருவரையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கொண்டு வந்தால் டி.ஆர்.பி ரேட்டிங் உயர சரியாக இருக்கும் என விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வீட்டிற்குள் சண்டைகள் வராமல் இருக்கவே இருக்காது. எனவே,பவித்ரா ஜனனி, தர்ஷிகா ஒரு வேலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவர்களின் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வந்தால் கூட மற்றோருவர் ஆதரவாக பேசுவார். இதனால், அவருக்கும் சக போட்டியாளர்களுடன் பிரச்சினை வரும்.
அது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் எப்படி தான் தோழியாக இருந்தாலும் ஒரு சில சமயங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படியாவது சண்டையும் வந்து நெருங்கிப் பழகி இருவருக்கும் இடையே நட்பு பிளர காரணமாகவும் அமைந்துவிடும். இதனைப்பற்றிச் சொல்லித் தான் தெரியவேண்டும் என்று இல்லை கடந்த சீசன்களில் அது தான் நடந்திருக்கிறது. அதனை நாம் பார்த்திருக்கிறோம்.
எனவே, இந்த சூழலில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் இருவரும் வெளியே இருப்பது போல இணைபிரியாத தோழிகளாக இருப்பார்களா? அல்லது சண்டை வருமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.