தனுஷ் ஆசைப்பட்ட 2 விஷயங்கள்? ஒன்னு நிறைவேறிவிட்டது…நிறைவேறுமா மற்றொன்று?

Dhanush தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் ராயன் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!
இதற்கிடையில், அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இளையராஜாவாக நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
READ MORE – நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!
அந்த படத்தின் பூஜை விழாவின் மேடையில் தான் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்கள் பற்றி நடிகர் தனுஷ் பேசி உள்ளார். ஒரு ஆசை என்னவென்றால் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் மற்றொரு ஆசை என்னவென்றால் ரஜினிகாந்தின் பயோபிக் படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டது.
read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!
இந்த இரண்டு ஆசைகளில் ஒரு ஆசை நிறைவேறிவிட்டது. அதாவது இளையராஜாவாக அவருடைய பயோபிக் படத்தில் நடிக்கும் ஆசை தனுஷிற்கு நிறைவேறிவிட்டது மற்றொரு ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கும் ஆசைதான். இந்த ஆசை நிறைவேறுமா என ரசிகர்களும் தனுஷும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!
நடிகர் தனுஷ் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலே இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி திவீர ரசிகர். அதைப்போல இளையராஜாவிற்கு பெரிய ரசிகர். எனவே சிறிய வயதில் இருந்தே இவர்களை பிடிக்கும் என்பதால் நடித்து முன்னணி நடிகரான பிறகு இவர்களுடைய பயோபிக் படங்களில் நடிக்கவும் தனுஷ் ஆசைப்பட்டு இருக்கிறார். ஒரு ஆசை நிறைவேறி இருக்கும் நிலையில், மற்றோரு ஆசை நிறைவேறுமா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025