சினிமாவில் அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளரின் மனைவி !
இசை அமைப்பாளர் யுவன் இரண்டு திருமண விவாகர்த்தை தொடர்ந்து,
மூன்றாவதாக இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஜபருன்னிசா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
யுவன் தற்போது படங்களுக்கு இசையமைப்பதோடு, மட்டுமல்லாது தயாரிப்பையும் தொடங்கியுள்ளார். பாகுபலி பட தயாரிப்பாளர் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தற்போது, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றார். இதில் பிக்பாஸ் ரைசா மற்றும் ஹரிஸ் ஜோடியாக நடிகின்றனர்.
இந்த படத்தில் யுவனின் மனைவி ஜபருன்னிசா காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகிறார். இவர் தான் ரைசாவுக்கு ஆடை வடிவமைத்து கொடுக்கிறார். யுவனின் குடும்பத்தில் ஏற்கனவே வாசுகி பாஸ்கர் என பிரபல காஸ்ட்யூம் டிசைனர்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.