simran angry [File Image ]
Simran : ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆட முதலில் நடிகை சிம்ரன் யோசித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரனுக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய நடிப்பு மற்றும் அவருடன் நடனத்திற்கு என்று இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய நடனம் மற்றும் கவர்ச்சியை வைத்து அவருக்கு ரசிகர்கள் இடுப்பழகி என்று பெயரும் வைத்தனர் என்றே சொல்லலாம். எத்தனையோ பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி இருக்கிறார்.
ஆனால், அனைவர்க்கும் பிடித்த பாடல் என்றால் அவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய ஆள்தோட்ட பூபதி பாடல் என்றே கூறலாம். விஜய்க்கு இணையாக ஒரு நடிகை நடனம் ஆடுவார் என்றால் சிம்ரன் தான். சிம்ரனும் விஜய்யும் இணைந்து ஆடிய அந்த ஆள்தோட்ட பூபதி பாடல் பட்டிதொட்டி எங்கும் அதிரி புதிரி ஹிட்டாகி சிம்ரனுக்கு பெரிய வரவேற்பையும் பெற்று தந்தது.
இருந்தாலும், சிம்ரன் இந்த பாடலில் நடனம் ஆடவே முதன் முதலாக யோசித்து கொண்டு இருந்தாராம். ஏனென்றால், அந்த சமயம் அவருக்கு பல படங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்ததாம். எனவே, இந்த பாடலில் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தபோது நான் இருக்கிற வேலையில் என்ன போய் ஒரு பாடலுக்கு ஆட சொல்லுறீங்க முடியவே முடியாது என சற்று கறார் காட்டினாராம்.
அதன்பிறகு, விஜய் பாடல் விஜய்யுடன் நீங்கள் நடனம் ஆடவேண்டும் என்று கூறினார்களாம். உடனே தான் அப்படியா என யோசித்தாராம். விஜய்க்கு சிம்ரனுக்கும் அந்த சமயம் நல்ல நட்பு இருந்தது. எனவே, விஜய்க்காக அந்த பாடலில் நடனம் ஆடவும் சிம்ரன் ஒற்றுக்கொண்டாராம். பிறகு பாடலில் நடனம் ஆடி முடித்த பின் அந்த பாடல் வெளிவந்து எல்லாரும் ரசித்தார்கள். பிறகு சிம்ரனுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி சொல்லவா வேண்டும்.
இப்படியான வரவேற்பை பார்த்தவுடன் நல்ல வேலை நாம் இந்த பாடலில் நடனம் ஆடாமல் மறுக்கவில்லை எனவும் யோசித்தாராம். சில பேட்டிகளும் கூட இந்த பாடல் எனக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது எனவும் நெகிழ்ச்சியாக தெரிவித்தும் இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…